டட்சன் கோ காரின் விற்பனை பெர்ஃபார்மென்ஸ் எப்படி?
கடந்த மார்ச் மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட டட்சன் கோ கார் நிசான் குழுமத்தின் விற்பனையில் பாதி பங்களிப்பை வழங்கியுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரலில் நிசான் நிறுவனம் 1,239 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இந்த நிலையில், டட்சன் கோ காரின் வருகையால் நிசான் குழுமத்தின் கார் விற்பனை ஏப்ரலில் 328 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த மாதம் மொத்தம் 5,301 கார்களை நிசான் விற்பனை செய்துள்ளது. இதில், 2,691 கார்கள் டட்சன் கோ கார்களின் விற்பனை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டட்சன் கோ காரின் விற்பனை பங்களிப்பு நிசான் நிறுவனத்தின் விற்பனையில் ஏற்றத்தை கொடுத்துள்ளது. ஆனால், இந்த நிலை வரும் மாதங்களில் நீடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
மேலும், டட்சன் பிராண்டில் கோ ப்ளஸ் எம்பிவி காரையும், நிசான் பிராண்டில் சன்னி ஃபேஸ்லிஃப்ட் மாடல் மற்றும் எவாலியா ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் விற்பனைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








