நிசான் கார்களுக்கு மாபெரும் சர்வீஸ் முகாம்: சிறப்பு சலுகைகள்

By Saravana

சிறப்பு சலுகைகளுடன் கூடிய கார்களுக்கான மாபெரும் சர்வீஸ் முகாமை நிசான் நடத்துகிறது. நாடு முழுவதும் உள்ள அங்கீகாரம் பெற்ற நிசான் சர்வீஸ் மையங்களில் இந்த சர்வீஸ் முகாம் நடக்க உள்ளது.

முதல் கட்டமாக வரும் 18ந் தேதி வரை 54 நகரங்களில் உள்ள சர்வீஸ் மையங்களில் இந்த சிறப்பு சர்வீஸ் முகாம் நடைபெற உள்ளதாக நிசான் தெரிவித்துள்ளது. "Happy with Nissan" என்ற பெயரில் நடைபெறும் இந்த சர்வீஸ் முகாமில் கார்களை சர்வீஸ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு லேபர் கட்டணம், உதிரிபாகங்கள் மீது 20 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nissan Active

இதுதவிர, சர்வீஸ் முகாமில் கலந்து கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கான சிறப்பு பரிசு திட்டங்களும் காத்திருக்கின்றன. கார் பராமரிப்புக்கு தேவையான பொருட்கள், சினிமா டிக்கெட்டுகள் மற்றும் ஷாப்பிங் கூப்பன்களை வெல்லும் வகையில் இந்த சிறப்பு பரிசுத் திட்டங்கள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாடுமுழுவதும் விரைவு சர்வீஸ் செய்து வரும் வகையில் 25 நடமாடும் ஒர்க்ஷாப் வாகனங்களையும் சேவையில் ஈடுபடுத்தியுள்ளது நிசான். இதனால், வாடிக்கையாளர்களுக்கு பராமரிப்பு செலவு வெகுவாக குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, May 10, 2014, 9:38 [IST]
English summary
Nissan India has announced its summer car service campaign, dubbed ‘Happy With Nissan'. Under this service campaign Nissan will organise free check-up camps across India.
மேலும்... #nissan #four wheeler #நிசான்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+