எளிய கார் கடன்: ஸ்டேட் வங்கியுடன் நிசான் ஒப்பந்தம்!

வாடிக்கையாளர்களுக்கு எளிய மற்றும் சிறப்பு கடன் திட்டத்தை வழங்குவதற்காக பாரத ஸ்டேட் வங்கியுடன் நிசான் கார் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கிக்கு 15,000 கிளைகளை கொண்டிருக்கிறது. மேலும், தனியார் வங்கிகளை விட சிறப்பான கடன் திட்டங்களை வழங்கி வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு குறைவான வட்டி விகிதத்தில் கார் கடனை பெறும் விதத்தில் நிசான் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

Nissan - Sbi Tie Up

இதுகுறித்து நிசான் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அருண் மல்ஹோத்ரா கூறுகையில்," வாடிக்கையாளர்களுடன் மிக வலுவான உறவையும், சேவையையும் வழங்குவதற்கு முன்னுரிமை கொடுத்து வருகிறோம்.

பாரத ஸ்டேட் வங்கியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதன் மூலம் எங்களது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பயன்களை பெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நிசான் மற்றும் டட்சன் பிராண்டு கார்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி மூலம் எளிய மற்றும் விரைவான கடன் திட்டங்களை பெறுவதற்கு இந்த ஒப்பந்தம் வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரையிலான தவணைத் திட்டங்களை வாடிக்கையாளர்கள் பெற முடியும். இந்த புதிய கடடன் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 10.40 சதவீதத்தில் பெண்களுக்கும், 10.45 சதவீத வட்டியில் ஆண் வாடிக்கையாளர்களும் கடன் திட்டங்களை பெறலாம். இந்த கடன் திட்டங்களுக்கு பிராசசிங் கட்டணம் இருக்காது," என்றும் தெரிவித்தார்.

More from DriveSpark

Article Published On: Friday, November 28, 2014, 17:11 [IST]
English summary
Nissan today, announced its strategic partnership with the State Bank of India (SBI) to offer its customers easy vehicle finance options across 15,000 plus branches in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+