அலங்காரப் பிரியனே... நிசான் ஜூக் மினி எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம்!

By Saravana

ஜெனீவா மோட்டார் ஷோவில் நிசான் ஜூக் நிஸ்மோ ஆர்எஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெரிய அளவிலான மாற்றங்கள் என்று கூறுவதற்கில்லை.

சிறிய மாற்றங்களுடன் இந்த புதிய மாடலை நிசான் அறிமுகம் செய்துள்ளது. சில இடங்களில் குழப்படிகள் இருந்தாலும், ஒட்டுமொத்த டிசைன் கவர்வதாகவே உள்ளது. இந்த புதிய மாடலின் படங்கள் மற்றும் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

எஞ்சின்

எஞ்சின்

நிசான் ஜூக் நிஸ்மோ ஆர்எஸ் மினி எஸ்யூவியில் 215 எச்பி பவரையும் 284 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1.6 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை வழங்குவதற்கான ஸ்டார்ட் ஸ்டாப் தொழில்நுட்பமும் உள்ளது.

குழப்பமான முகப்பு

குழப்பமான முகப்பு

370இசட் ஸ்போர்ட்ஸ் கார் போன்று பானட்டில் இருக்கும் ஹெட்லைட் மட்டுமின்றி, வட்ட வடிவிலான இரண்டு ஹெட்லைட்டுகளும் கொடுக்கப்பட்டுள்ளது. எல்இடி பகல்நேர ரன்னிங் விளக்குகள் அதற்கு கீழே தனியாக உள்ளன. இவையனைத்தும் முகப்பு டிசைனில் ஒருவித குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. இருப்பினும், ஒரு தனித்துவமான டிசைன் என்பதை மறுப்பதற்கில்லை.

பக்கவாட்டு டிசைன்

பக்கவாட்டு டிசைன்

கிரே கலரிலான காருக்கு சிவப்பு நிறத்திலான ரியர் வியூ கண்ணாடிகள் கொடுக்கப்பட்டுள்ளன. பக்கவாட்டு டிசைன் சற்று சுஸுகி ஸ்விஃப்ட் காரை நினைவூட்டுவதாகவும் இருக்கிறது. பெரிய வீல் ஆர்ச்சுகள் எஸ்யூவிக்கான அடையாளத்தை தருகின்றன. ஆனால், இதன் 10 ஸ்போக் கொண்ட 18 இஞ்ச் அலாய் வீல்கள் பொருத்தமாக தெரியவில்லை.

 பின்புற டிசைன்

பின்புற டிசைன்

பின்புறம் செமத்தியாக டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. எல் வடிவ டெயில் லைட்டுகள், ஸ்பாய்லர், பெரிய சைலென்சர் குழாய், பம்பர், டிஃபியூசர் ஆகியவை இந்த காரின் தோற்றத்தை கம்பீரமாக காட்டுகின்றன.

இன்டிரியர்

இன்டிரியர்

கருப்பு நிற இன்டிரியரில் ஆங்காங்கே சிவப்பு வண்ணத்தை பயன்படுத்தி அழகு சேர்த்துள்ளனர். ஸ்போர்ட்ஸ் பெடல்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஸ்டீயரிங் வீல் எந்த நிலையில் இருக்கிறது என்பதை எளிதாக அறிந்து கொள்ளும் விதத்தில் சிவப்பு நிற வளையம் கொடுக்கப்பட்டுள்ளன.

 விலை

விலை

அமெரிக்க மார்க்கெட்டில் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடல் 26,120 டாலர் விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது. சிவிடி டிரான்ஸ்மிஷன் மாடல் இதைவிட 2,000 டாலர் கூடுதல் விலையில் விற்பனைக்கு செல்கிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 5, 2014, 16:12 [IST]
English summary
Nissan have showcased their facelifted version of the Juke at Geneva Motor Show. However, the design of the mini SUV hasn't changed to great extent. It still has the love it or hate it look.
மேலும்... #nissan #four wheeler #நிசான்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+