அட்டகாசமான டிசைனில் புதிய நிசான் காம்பேக்ட் எஸ்யூவி கான்செப்ட்!
அட்டகாசமான டிசைன் கொண்ட புதிய நிசான் காம்பேக்ட் எஸ்யூவி பிரேசில் நாட்டின் சாவ் பாவ்லோ நகரில் நடந்து வரும் ஆட்டோமொபைல் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
நிசான் கிக்ஸ் என்று பெயரிடப்பட்ட இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி கான்செப்ட தயாரிப்பு நிலைக்கு செல்லும் வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளதாக நிசான் பிரேசில் நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார். இதனால், இந்த மினி எஸ்யூவியை பிரேசில் நாட்டு கார் பிரியர்கள் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்தியுள்ளது.
படங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

டிசைன்
ஜப்பானிலுள்ள நிசான் குளோபல் டிசைன் சென்டரின் மேற்பார்வையில், நிசான் டிசைன் அமெரிக்கா ரியோ ஸ்டூடியோவின் ஆலோசனைகளின் அடிப்படையில் சான்டியாகோ நகரில் உள்ள நிசான் அமெரிக்கா டிசைன் மையத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வடிவம்
நிசான் ஜூக் போன்ற அளவுகளில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மினி எஸ்யூவி 4.3 மீட்டர் நீளமும், 1.8 மீட்டர் அகலமும், 1.6 மீட்டர் உயரமும் கொண்டது.

பதிலி மாடல்
இது நிசான் ஜூக் எஸ்யூவிக்கு பதிலி மாடலாக அறிமுகம் செய்யப்படலாம் என்று தகவலும் ஆட்டோமொபைல் வட்டாரத்திலிருந்து கிடைக்கிறது.

தோற்றம்
மிக நவீன டிசைன் தாத்பரியங்களுடன் மிக கம்பீரமாக இருக்கிறது. 19 இஞ்ச் அலாய் வீல்கள் இந்த எஸ்யூவியின் தோற்றத்தை மிடுக்காகவும், கம்பீரமாகவும் மாற்றிக் காட்டுகிறது.

டிசைன் அம்சங்கள்
2012ம் ஆண்டு சாவ் பாவ்லோ ஆட்டோமொபைல் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த எக்ஸ்ட்ரீம் என்ற கூபே கான்செப்ட் மாடலின் டிசைன் தாத்பரியங்கள் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி கான்செப்ட்டில் தென்படுகிறது. பிரேசில் மார்க்கெட்டுக்காக எக்ஸ்ட்ரீம் கான்செப்ட்டை தொடர்ந்து இரண்டாவது பிரத்யேக மாடலாக கிக்ஸ் காம்பேக்ட் எஸ்யூவியை நிசான் வடிவமைத்துள்ளது.

தொழில்நுட்ப விபரம்
இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவியின் தொழில்நுட்ப விபரங்கள் பற்றிய தகவல் இல்லை.


Click it and Unblock the Notifications








