விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் நிசான் ஜிடி ஆர் ஸ்போர்ட்ஸ் கார்!

இந்தியாவில் விரைவில் நிசான் ஜிடி ஆர் ஸ்போர்ட்ஸ் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தியா உள்பட உலக அளவில் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளது நிசான் ஜிடி ஆர்.

இந்த காருக்கு தேவையான தரமிக்க எரிபொருள் மற்றும் போதுமான சர்வீஸ் கட்டமைப்பு இல்லாததால் இந்தியாவில் இந்த காரை அறிமுகப்படுத்துவதை நிசான் தவிர்த்து வந்தது. இந்த நிலையில், ஜிடி- ஆர் ஸ்போர்ட்ஸ் காரை இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு நிசான் முடிவு செய்துள்ளது.

நரேன் கார்த்திகேயன், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட சிலர் இந்த காரை இறக்குமதி செய்து வாங்கியுள்ளனர். ஆனால், அதற்கு பெரும் மெனக்கெடுகளை அவர்கள் செய்ய வேண்டியிருந்தது. ஆனால், இந்தியாவிலேயே விற்பனைக்கு கொண்டு வரப்படுவதால், இந்த காருக்கு பெரிய வரவேற்பு இருக்கும் என்று கூறலாம்.

இந்த காரைப் பற்றிய கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

 இறக்குமதி மாடல்

இறக்குமதி மாடல்

இந்த புதிய நிசான் ஜிடி ஆர் ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும்.

 எஞ்சின்

எஞ்சின்

புதிய நிசான் ஜிடி ஆர் காரில் 545 பிஎச்பி சக்தியையும், 628 என்எம் டார்க்கையும் வாரி வழங்கும் 3.8 லிட்டர் ட்வின் டர்போ வி6 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

 பெர்ஃபார்மென்ஸ்

பெர்ஃபார்மென்ஸ்

4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட இந்த கார் 0- 100 கிமீ வேகத்தை வெறும் 2.9 வினாடிகளில் எட்டிவிடும் வல்லமை கொண்டது.ட

மைலேஜ்

மைலேஜ்

இதுபோன்ற கார்களில் மைலேஜை பற்றி கூறுவது சிறப்பாக இருக்காது. ஆனாலும், நிசான் தகவலின்படி, லிட்டருக்கு 6.8 கிமீ முதல் 9.78 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது.

உற்பத்தி இலக்கு

உற்பத்தி இலக்கு

உலக அளவில் மாதத்திற்கு 1,000 கார்கள் என்ற இலக்குடன் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும், முழுவதும் மனித ஆற்றலை பயன்படுத்தி இந்த கார்கள் கட்டமைக்கப்படுகின்றன.

அம்சங்கள்

அம்சங்கள்

கார்பன் ஃபைபர் ரியர் ஸ்பாய்லர், ரியர் வியூ மானிட்டர், இரட்டை வண்ண இன்டிரியர் உள்ளிட்ட ஏராளமான புதிய அம்சங்களுடன் வர இருக்கிறது புதிய நிசான் ஜிடி-ஆர் ஸ்போர்ட்ஸ் கார்.

பிரத்யேக சர்வீஸ் மையம்

பிரத்யேக சர்வீஸ் மையம்

இந்தியாவில் இந்த புதிய ஸ்போர்ட்ஸ் காருக்கு பிரத்யேக சர்வீஸ் மையங்களை அமைப்பதற்கு நிசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், ஏற்கனவே நிசான் ஜிடி ஆர் காரை வைத்திருக்கும் சச்சின் டெண்டுல்கர், நரேன் கார்த்திகேயன் போன்ற வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சர்வீஸ் வசதி கிடைக்கும்.

விலை

விலை

ரூ.1.2 கோடி விலையில் இந்த புதிய கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் பண்டிகை காலத்தில் விற்பனைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, July 7, 2014, 18:13 [IST]
English summary
The iconic Nissan GT-R sports car will be launched in India soon. The company expects it to have a positive effect on the brand.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+