ஜூலை 3ல் விற்பனைக்கு வருகிறது நிசான் சன்னி ஃபேஸ்லிஃப்ட்!
வரும் ஜூலை 3ந் தேதி நிசான் சன்னி ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்தியர்களுக்கு தரிசனம் கொடுத்த இந்த புதிய மாடல் சிறிய மாற்றங்கள் மற்றும் கூடுதல் வசதிகளுடன் வருகிறது.
ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா மற்றும் ஃபோர்டு ஃபியஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடல்களுடன் போட்டி வரும் இந்த புதிய கார் பல்வேறு வகையிலும் கூடுதல் மதிப்பு கொண்டதாக மாற்றப்பட்டிருக்கிறது.

மாற்றங்கள்
புதிய பம்பர், ஹெட்லைட், முகப்பு கிரில் ஆகியவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டு சன்னி கூடுதல் கவர்ச்சியாக தெரிகிறது. ஒட்டுமொத்த டிசைனில் பெரிய மாற்றங்கள் தெரியவில்லை.

இன்டிரியர்
இன்டிரியரில் பியானோ பிளாக் வண்ண கன்சோல், புதிய என்டர்டெயின்மென்ட் சிஸ்டம், புதிய ஃபேப்ரிக் இருக்கைகள், 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல், பார்க்கிங் சென்சார் போன்ற வசதிகளுடன் வருகிறது.

பெட்ரோல் எஞ்சின்
பெட்ரோல் மாடலில் 99 எச்பி பவரையும், 134 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1.5 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இது 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்ட மாடலாகும். இதுதவிர, இதே எஞ்சினுடன் 101 எச்பி பவரை அளிக்கும் எக்ஸ் ட்ரோனிக் சிவிடி டிரான்ஸ்மிஷன் மாடலிலும் கிடைக்கும்.

டீசல் மாடல்
டீசல் மாடலில் 1.5 லிட்டர் கே9கே எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இது 86 எச்பி பவரையும், 200 என்எம் டார்க்கையும் அளிக்கும்.

டீசல் மைலேஜ்
டீசல் மாடலில் எஞ்சின் இசியூ.,வில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால் சிறிது கூடுதல் மைலேஜ் தரும் வகையில் வருகிறது. முந்தைய மாடல் லிட்டருக்கு 21.64 கிமீ மைலேஜ் தருவதாக இருந்தது. புதிய மாடல் லிட்டருக்கு 22.71 கிமீ மைலேஜ் தருவதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








