நிசான் மைக்ராவின் லிமிடேட் எடிசன் மாடல் அறிமுகம்!

By Saravana

இங்கிலாந்தில் நிசான் மைக்ராவின் புதிய லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

சிலிர்ப்பூட்டும் வண்ணக் கலவைகளில் அங்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருக்கும் இந்த புதிய மைக்ரா கார் சென்னை ஒரகடம் ஆலையிலிருந்துதான் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

அசத்தலான புதிய மைக்ரா லிமிடேட் எடிசன் காரின் படங்களையும், கூடுதல் அம்சங்களையும் ஸ்லைடரில் காணலாம்.

 மிட் வேரியண்ட்

மிட் வேரியண்ட்

இங்கிலாந்தில் லிமிடேட் எடிசன் மாடலாக விற்பனை செய்யப்பட இருக்கும் இந்த புதிய மைக்ரா கார் அசென்ட்டா என்ற மிட் வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கும்.

டியூவல் டோன் கலர்

டியூவல் டோன் கலர்

இரட்டை வண்ணக் கலவை கொண்டதாக வந்துள்ளது. காரின் கூரை மற்றும் ரியர் வியூ கண்ணாடியில் வேறு வண்ணம் பூசப்பட்டுள்ளதால், படு கவர்ச்சியாக இருக்கிறது. பசிஃபிக் புளூ, சிராஸ் ரெட் மற்றும் அலபாஸ்டர் ஒயிட் ஆகிய வண்ணங்களில் கிடைக்கும்.

இன்டிரியரிலும்...

இன்டிரியரிலும்...

வெளிப்புறம் மட்டுமின்றி உட்புறத்திலும் ஏசி, கியர் லிவர் மற்றும் மிதியடிகளில் கான்ட்ராஸ்ட் வண்ணம் பயன்படுத்தப்பட்டுள்ளது. குரூஸ் கன்ட்ரோல் வசிதியும் உள்ளது.

புகைப்போக்கி குழாய்

புகைப்போக்கி குழாய்

குரோம் பூச்சுடன் கூடிய புகைப்போக்கி குழாய் மற்றும் லிமிடேட் எடிசன் பேட்ஜ் ஆகியவையும் மைக்ரா லிமிடேட் எடிசன் காருக்கு கூடுதல் மதிப்பை கொடுக்கிறது. 15 இஞ்ச் அலாய் வீல் மற்றும் ரூஃப் ஸ்பாய்லரும் நிரந்தர ஆக்சஸெரீஸ்களாக இடம்பெற்றிருக்கின்றன.

 விலை

விலை

இந்திய மதிப்பில் ரூ.12.66 லட்சம் விலையில் அங்கு நிசான் மைக்ரா லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு வந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, February 3, 2014, 11:01 [IST]
English summary
Nissan UK has now come out with a limited edition of the Micra in that country. The highlight of the limited edition is its contrasting roof colour and this simple implementation of dual colour brings in a drastic change in the characteristics of the Micra as you can see for yourself in the images below.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+