நாளை அறிமுகமாகிறது புதிய நிசான் பல்சர் ஹேட்ச்பேக் கார்!
பல்சர் என்ற பெயரில் புதிய ஹேட்ச்பேக் கார் மாடலை நிசான் நிறுவனம் உலக அளவில் நாளை அறிமுகப்படுத்த உள்ளது.
தற்போது இந்த காரின் டீசர் படம் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. முதலில் ஐரோப்பிய மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய கார் பின்னர் பல்வேறு மார்க்கெட்டுகளிலும் விற்பனைக்கு செல்லும்.

ஐரோப்பிய மார்க்கெட்டில் ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் காருக்கு நிசான் பல்சர் நேருக்கு நேர் போட்டியை கொடுக்கும். இதுதவிர, ஃபோர்டு ஃபோகஸ், ரெனோ மெகானே ஆகிய மாடல்களுடனும் போட்டி போடும்.
இந்தியாவில் வந்தால் புதிய பெயரில் வெளியிடப்படலாம். இருப்பினும், உடனடியாக வரும் என்று கூற முடியாது. ஒரு சில ஆண்டுகளுக்கு பின்னரே இந்த காரை எதிர்பார்க்கலாம்.
இந்த காரின் முழுமையான விபரங்கள் நாளை வெளியிடப்பட உள்ளன. இந்த கார் மட்டுமின்றி, நாளை யமஹாவின் புதிய 250சிசி பைக் மாடலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது நினைவுக்கூறத்தக்கது.


Click it and Unblock the Notifications








