ஏற்றுமதியில் நிசானிடம் 2ம் இடத்தை கோட்டை விட்டது மாருதி!

By Saravana

ஏற்றுமதியில் மாருதி கார் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி 2ம் இடத்தை கைப்பற்றியுள்ளது நிசான் நிறுவனம்.

நாட்டின் கார் ஏற்றுமதியில் ஹூண்டாய் முதலிடத்தில் இருந்து வருகிறது. இதற்கடுத்ததாக, மாருதி நிறுவனம் இருந்து வந்தது. இந்த நிலையில், நடப்பு நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களின் நிலவரப்படி, ஏற்றுமதியில் மாருதியை பின்னுக்குத் தள்ளி நிசான் நிறுவனம் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது.

Nissan Sunny

நடப்பு நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களில் நிசான் நிறுவனம் 94,931 கார்களையும், மாருதி நிறுவனம் 79,945 கார்களையும் ஏற்றுமதி செய்துள்ளன. அல்ஜீரியா மற்றும் சில ஆப்ரிக்க நாடுகளில் இந்தியாவுடன் தடையில்லா வர்த்தக கொள்கை அமல் செய்யப்பட்டுள்ளதையடுத்து, கார்களுக்கான தர நிர்ணய விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட நாடுகளின் தர நிர்ணயக் கொள்கைகளுக்கு தகுந்தவாறு கார்களில் மாற்றங்கள் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியால் கடந்த இரு மாதங்களாக மாருதி நிறுவனத்தின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலை, அடுத்த இரண்டு அல்லது மூன்று காலாண்டுகளுக்கு தொடரும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, February 13, 2014, 15:27 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+