இன்னும் 7 மாதங்களில் டட்சன் கார்களுக்கு தனி ஷோரூம்கள்: நிசான்

By Saravana

இன்னும் 6 முதல் 7 மாதங்களில் டட்சன் கார்களுக்கு தனி ஷோரூம்கள் அமைக்க இருப்பதாக நிசான் தெரிவித்துள்ளது. இந்த நிதி ஆண்டிற்குள் இந்த புதிய ஷோரூம்கள் செயல்பாட்டுக்கு வந்துவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டட்சன் கார்கள் தற்போது நிசான் கார் ஷோரூம்களிலேயே விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் கார் வாங்கும் அனுபவத்தை சிறப்பானதாக மாற்றும் வகையில், டட்சன் பிராண்டு கார்களுக்கு தனி ஷோரூம்களை அமைக்க நிசான் திட்டமிட்டுள்ளது.

Datsun Cars

இதுகுறித்து நிசான் இந்தியா நிறுவனத்தின் தலைவர் கென்சிரோ யோமுரா கூறுகையில்," நடப்பு நிதி ஆண்டிற்குள் டட்சன் கார்களுக்கு தனி ஷோரூம்கள் அமைக்கப்பட்டுவிடும்.

நிசான் மற்றும் டட்சன் கார்களின் வாடிக்கையாளர்கள் வட்டம் வேறு வேறு. எனவே, தனித்தனி ஷோரூம்களில் கார் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம்.

தற்போது நிசான் பிராண்டுக்கு 130 ஷோரூம்கள் உள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் இதனை 200 ஆக உயர்த்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்," என்று கூறினார்.

More from DriveSpark

Article Published On: Friday, May 9, 2014, 11:39 [IST]
English summary
Japanese auto major Nissan will start selling its Datsun brand from exclusive showrooms within this fiscal as it plans to have in three years' time totally independent outlets of its two brands in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+