வரும் ஆகஸ்ட்டில் வருகிறது நிசான் சன்னி ஃபேஸ்லிஃப்ட்!

By Saravana

சில ஆண்டுகளுக்கு முன் விற்பனைக்கு வந்த நிசான் சன்னி மிட்சைஸ் செக்மென்ட்டின் பட்ஜெட் மாடலாக விளங்குகிறது. இந்த நிலையில், ஹோண்டா அமேஸ் உள்ளிட்ட காம்பெக்ட் செடான் கார்களின் வரவால் சன்னியின் மார்க்கெட் சரிந்தது.

இதையடுத்து, கூடுதல் அம்சங்களுடன் கூடிய சன்னி காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை வரும் ஆகஸ்ட்டில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது நிசான். வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் பல்வேறு மாற்றங்களுடன் வரும் சன்னி ஃபேஸ்லிஃப்ட் பற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.


டிசைன்

டிசைன்

வெளிப்புறத்தில் முக்கிய மாற்றங்களாக புதிய ஹெட்லைட், முகப்பு கிரில், பம்பர் ஆகியவற்றை கூறலாம். குரோம் பூச்சு கொண்ட கைப்பிடிகள், இண்டிகேட்டர் பொருத்தப்பட்ட ரியர் வியூ கண்ணாடிகள் ஆகியவையும் சன்னியின் புதிய அம்சங்களாக இருக்கின்றன. புதிய அலாய் வீல்களும் அழகு சேர்க்கும். பின்புறத்தில் அதிக மாற்றங்கள் இல்லை. பம்பருக்கு கீழே புதிய பிளாஸ்டிக் பாகம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், பூட் ஸ்பாய்லரும் சன்னிக்கு கூடுதல் அம்சங்களாக இருக்கும்.

இன்டிரியர்

இன்டிரியர்

இன்டிரியர் பியானோ பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கிறது. தற்போதைய மாடலில் டல்லடிக்கும் சென்டர் கன்சோல் அதிக மாற்றங்களுடன் புதுப்பொலிவு கொடுக்கப்பட்டுள்ளது. இன்போடெயின்மென்ட் சிஸ்டத்தில் புளூடூத் மற்றும் யுஎஸ்பி போர்ட் வசதிகள் இருக்கும்.

பாதுகாப்பு

பாதுகாப்பு

ஏபிஎஸ், இபிடி மற்றும் பிரேக் அசிஸ்ட் அம்சங்கள் நிரந்தர அம்சங்களாக இருக்கும். முன்புறத்தில் டியூவல் ஏர்பேக்குகள் மற்றும் டாப் வேரியண்ட்டில் பக்கவாட்டு ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் நடத்தப்பட்ட என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் பல இந்திய கார் மாடல்கள் சொதப்பிய நிலையில், தற்போது மார்க்கெட்டுக்கு வரும் மாடல்கள் அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் வந்து கொண்டிருக்கின்றன.

எஞ்சின்

எஞ்சின்

டிசைனில் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்த போதிலும், எஞ்சினில் எந்த மாற்றங்களும் இல்லை. 99 பிஎஸ் பவரை அளிக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் கிடைக்கும்.

More from DriveSpark

Article Published On: Saturday, May 3, 2014, 15:23 [IST]
English summary
Nissan Sunny Facelift To Be Launched By August 2014 Japanese carmaker Nissan India is expected to launch the new 2014 Sunny during the fesive season. New Sunny will be launched sometime in August this year. 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+