பிப்ரவரியில் மேம்படுத்தப்பட்ட சன்னி காரை அறிமுகப்படுத்தும் நிசான்!
தோற்றத்தில் புதுப்பொலிவு மற்றும் கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட மாடலாக வருகிறது நிசான் சன்னி. அடுத்த மாதம் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த மேம்படுத்தப்பட்ட சன்னி கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
வெளிப்புறத் தோற்றத்தை பொறுத்தவரையில் ஹெட்லைட், முகப்பு கிரில் மற்றும் பம்பர் டிசைனில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும். இதேபோன்று உட்புறத்தில் பல மாற்றங்களுடன் மேம்படுத்தப்பட்ட சன்னி கார் வருகிறது.

மேலும், 2014 மாடலாக வரும் மேம்படுத்தப்பட்ட நிசான் சன்னி காரின் எக்ஸ்வி டாப் வேரியண்ட்டில் பல கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட உள்ளன. 4 ஏர்பேக்குகள், ரிவ்ர்ஸ் பார்க்கிங் கேமார ஆகியவை கூடுதலாக இடம்பெற இருக்கின்றன.
தற்போதைய அதே எஞ்சின்கள்தான். மாற்றம் இருக்காது. மேலும், லீனியாவின் குறைந்த விலை மாடலை கிளாசிக் என்ற பெயரில் ஃபியட் அறிமுகம் செய்தது போன்று, தற்போது விற்பனையில் உள்ள சன்னி காரை குறைந்த விலை வேரியண்ட்டாக தொடர்ந்து விற்பனை செய்யவும் நிசான் திட்டமிட்டுள்ளது.
மேலும், குறைந்த விலை வேரியண்ட்டில் பல வசதிகளை குறைத்து நிசான் வெளியிட உள்ளது. இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசலில் கிடைக்கும். மைக்ரா ஆக்டிவ் போன்று சன்னி ஆக்டிவ் என்ற பெயரில் இந்த புதிய மாடல் வரலாம்.
மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ் கார்களுக்கு போட்டியை கொடுக்கும் விலையில் இந்த குறைந்த விலை நிசான் சன்னி கார் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








