நிசான் டெரானோ லிமிடேட் எடிசன் அறிமுகம்: ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு

By Saravana

ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் ரீபேட்ஜ் மாடலாக கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிசான் டெரானோ எஸ்யூவி மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு ஓர் ஆண்டுகள் நிறைவடைகிறது.

இதனை கொண்டாடும் விதத்தில், லிமிடேட் எடிசன் மாடலை நிசான் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. மிக பிரத்யேகமான அம்சங்களுடன் வந்திருக்கும் டெரானோவின் லிமிடேட் எடிசன் மாடல் பற்றிய விபரங்கள் அனைத்தையும் ஸ்லைடரில் காணலாம்.


இரு வேரியண்ட்டுகள்

இரு வேரியண்ட்டுகள்

டெரானோவின் 110 பிஎஸ் பவர் கொண்ட டீசல் மாடலில் மட்டும் இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வந்துள்ளது. XVD மற்றும் XVD THP Premium என்ற இரு வேரியண்ட்டுகளில் மட்டுமே கிடைக்கும்.

வண்ணங்கள்

வண்ணங்கள்

பிரான்ஸ் கிரே, பிளேடு சில்வர், ஃபையர் ரெட், ஸ்டெர்லிங் கிரே, ஸ்டோர்ம் ஒயிட், பியர்ல் ஒயிட் ஆகிய 5 வண்ணங்களில் லிமிடேட் எடிசன் மாடல் கிடைக்கும்.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

கருப்பு நிறத்திலான கூரை, பக்கவாட்டில் ரியர் வியூ கண்ணாடிகள் மற்றும் பில்லர்களும் கருப்பு வண்ணம் கொடுக்கப்பட்டுள்ளது. பானட்டில் இரண்டு கோடுகள் கொடுக்கப்பட்டு ஸ்போர்ட்டியான தோற்றத்துடன் கவர்கிறது. பின்புறத்தில் லிமிடேட் எடிசன் பேட்ஜ் கொடுக்கப்பட்டிருக்கிறது. குரோம் பூச்சுடன் கதவு கைபப்பிடிகள் உள்ளன.

ஹெட் அப் டிஸ்ப்ளே

ஹெட் அப் டிஸ்ப்ளே

நிசான் டெரானோ முதலாமாண்டு எடிசனில் குறிப்பிடத்தக்க சிறப்பு ஆக்சஸெரீயாக ஹெட் அப் டிஸ்ப்ளேவை கூறலாம்.

பார்க்கிங் சென்சார்

பார்க்கிங் சென்சார்

டிரைவர் இருக்கை உயரத்தை கூட்டிக் குறைக்கும் வசதி, லெதர் உறை போடப்பட்ட ஸ்டீயரிங் வீல் மற்றும் கியர் நாப், ஸீப்ரா வுட் ஃபினிஷ் மரத்தகடுகளுடன் பளபளக்கிறது. லெதர் இருக்கைகள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சாரும் கூடுதல் அம்சங்கள்.

 லிமிடேட் எடிசன்

லிமிடேட் எடிசன்

மொத்தம் 450 யூனிட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளன. ஆன்லைன் மூலமாக மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். டீலர்ஷிப்புக்கு சென்றாலும், ஆன்லைன் மூலமாகவே முன்பதிவு செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை

விலை

XV D வேரியண்ட் ரூ.12.83 லட்சத்திலும், XV D THP Premium வேரியண்ட் ரூ.13.13 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கும்.

ரியர் ஸ்பாய்லர்

ரியர் ஸ்பாய்லர்

ரியர் ஸ்பாய்லர் கொடுக்கப்பட்டுள்ளது.

பேட்ஜ்

பேட்ஜ்

நிசான் டெரானோ முதலாமாண்டு கொண்டாட்ட சிறப்பு பதிப்பு மாடலின் அடையாளச் சின்னம்.

சைடு சில்

சைடு சில்

கூடுதல் ஆக்சஸெரீகளில் ஒன்றான சைடு சில்கள்.

More from DriveSpark

Article Published On: Thursday, October 9, 2014, 16:43 [IST]
English summary
Nissan India has launched the Terrano Anniversary Edition with exciting additional features.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+