இந்தியாவிலிருந்து எக்ஸ்ட்ரெயில், 370இசட் கார்களை விலக்கிய நிசான்!
இந்திய மார்க்கெட்டிலிருந்து எக்ஸ்- ட்ரெயில் எஸ்யூவி மற்றும் 370இசட் கார்களின் விற்பனையை நிறுத்தியுள்ளது நிசான்.
கடந்த ஆண்டு இந்த இரு மாடல்களின் விற்பனை படு மோசமாக இருந்ததால், இந்த நடவடிக்கையை நிசான் எடுத்துள்ளது.

கடந்த ஆண்டு மொத்தமாக 7 எக்ஸ் ட்ரெயில் பிரிமியம் எஸ்யூவிகளை மட்டுமே விற்பனை செய்தது. அதேவேளை, ஒரு 370இசட் கார் கூட விற்பனையாகவில்லை.
இதையடுத்தே, அந்த இரு மாடல்களையும் இந்திய மார்க்கெட்டிலிருந்து விலக்கிக் கொண்டுள்ளது. அதேவேளை, மைக்ரா, சன்னி, டெரானோ போன்ற அதிகம் விற்பனையாகும் ரகத்திலான கார் மாடல்களின் எண்ணிக்கையை அந்த நிறுவனம் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








