ஹோண்டா கார்களில் என்விடியா பிராசஸருடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்!

By Saravana

புதிய என்விடியா பிராசர் பொருத்தப்பட்ட ஆடியோ சிஸ்டம் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் புதிய ஹோண்டா கார் மாடல்கள் வர இருக்கின்றன.

2015 ஹோண்டா சிவிக், சிவிக் டூரர் மற்றும் சிஆர்-வி மாடல்களில் இந்த என்விடியா பிராசஸர் பொருத்தப்பட்ட ஆடியோ மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு ஐரோப்பிய மார்க்கெட்டில் இந்த புதிய கார் மாடல்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. ஆன்ட்ராய்டு 4.0.4, ஐஸ்க்ரீம் சான்ட்விச் இயங்குதளம் கொண்ட ஹோண்டா நிறுவனத்தின் கனெக்ட் இன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் என்விடியா டெக்ரா பிராசஸர் செயலாற்றும்.

Honda Processor

இதன்மூலம், ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்களை எளிதாக தரவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும் என்பதோடு, பாதுகாப்பான பயணத்தையும் வழங்கும் என என்விடியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக அளவில் என்விடியா டெக்ரா ஆட்டோமோட்டிவ் கிரேடு பிராசஸருடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பயன்படுத்தும் 19வது வாகன நிறுவனமாக ஹோண்டா குறிப்பிடப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, October 11, 2014, 11:33 [IST]
English summary
NVIDIA has announced its NVIDIA Tegra mobile processor will power the new Honda Connect in-car audio and information system in the 2015 Honda Civic, Civic Tourer and CR-V, which is scheduled to launched next year in Europe.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+