புதிய மாடல்களின் வருகை... பழைய மாடல்களுக்கு 'மெகா' தள்ளுபடி!!
மேம்படுத்தப்பட்ட மற்றும் புதிய மாடல்களின் வருகையால், மார்க்கெட்டிலிருந்து விடைபெறும் பழைய மாடல்களுக்கு அதிகபட்ச தள்ளுபடியை பெறும் வாய்ப்பு இருக்கிறது.
இருப்பை காலி செய்யும் விதமாக தயாரிப்பாளரும், டீலர் அளவிலும் அதிகபட்ச தள்ளுபடி சலுகைகளை வழங்குகின்றனர். மாருதி எக்ஸ்எக்ஸ்-4, போலோ, புன்ட்டோ உள்ளிட்ட கார்களுக்கு தற்போது அதிகபட்சமான தள்ளுபடியை பெறலாம். மார்க்கெட்டிலிருந்து விடைபெறும் கார்களுக்கு வழங்கப்படும் தள்ளுபடி விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

தள்ளுபடி விபரம்
பழைய மாடல்களுக்கு அதிகபட்ச பேரம் பேசும் வாய்ப்புள்ளது. தள்ளுபடிகள் குறித்த விபரங்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

ஃபோக்ஸ்வேகன் போலோ
சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், இருப்பு இருக்கும் பழைய மாடலுக்கு ரூ.50,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ
புதிய போலோ காரைத் தொடர்ந்து மேம்படுத்தப்பட்ட வென்ட்டோ காரையும் ஃபோக்ஸ்வேகன் இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. எனவே, முன்கூட்டியே பழைய வென்ட்டோ கார்களை விற்பனை செய்யும் விதமாக ரூ.1.2 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரூ.90,000 நேரடி பணத்தள்ளுபடியாகவும், ரூ.30,000 எக்ஸ்சேஞ்ச் போனசாகவும் வழங்கப்படுகிறது.

மாருதி எக்ஸ்எக்ஸ்4
அடுத்த மாதம் மாருதி எக்ஸ்எக்ஸ்4 காருக்கு மாற்றாக புதிய சியாஸ் செடான் கார் விற்பனைக்கு வர உள்ளது. இதற்காக, எஸ்எக்ஸ்4 காரின் இருப்பை கழித்துக் கட்டும் விதமாக ரூ.90,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஃபியட் புன்ட்டோ
சமீபத்தில் புதிய புன்ட்டோ இவோ கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுவிட்ட நிலையில், இருப்பு இருக்கும் பழைய புன்ட்டோ கார்களுக்கு ரூ.70,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில், ரூ.50,000 வரை விலையில் நேரடி தள்ளுபடியாக பெறும் வாய்ப்பு உள்ளது. இலவச இன்ஸ்யூரன்ஸ், கார்ப்பரேட் டிஸ்கவுண்ட் சலுகைகளும் கொடுக்கப்படுகிறது.

டாடா இண்டிகா விஸ்டா
ஸெஸ்ட் காம்பேக்ட் செடான் கார் விற்பனைக்கு வந்துவிட்ட நிலையில், அடுத்ததாக போல்ட் ஹேட்ச்பேக் காரை டாடா மோட்டார்ஸ் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. இந்த நிலையில், போல்ட் கார் விற்பனைக்கு வந்தாலும், விஸ்டா கார் விற்பனையில் தொடர்ந்து இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், விஸ்டா காருக்கு தயாரிப்பாளர் மற்றும் டீலர் என இருவரின் சலுகைகள் மூலம் ரூ.63,500 வரை தள்ளுபடியை பெறும் வாய்ப்பு இருக்கிறது.

நோ சான்ஸ்
புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 கார் வருகையால் பழைய ஐ20 காருக்கும் சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆனால், ஏற்கனவே பழைய மாடல்கள் ஐ20 கார்கள் விற்பனையாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டீலர்களில் ஒன்றிரண்டு கார்கள் கூட பழைய ஐ20 மாடல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, தமிழகத்தில் கிட்டத்தட்ட பழைய ஐ20 மாடல் கார்கள் இருப்பு காலியாகிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பு
சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் டீலருக்கு டீலர் வேறுபடும். எனவே, முழுமையான சலுகை விபரங்களை தெரிந்துகொள்ள சம்பந்தப்பட்ட கார் தயாரிப்பு நிறுவனத்தின் டீலரை தொடர்புகொள்ளுமாறு வேண்டுகிறோம்.


Click it and Unblock the Notifications








