பிசிபி.,யின் புதிய நடமாடும் இல்லங்கள் விற்பனைக்கு வந்தன - முழு விபரம்

By Saravana

பாரகோட் நிறுவனத்தின் அங்கமாக செயல்படும் பிசிபி., நிறுவனம் மூன்று புதிய மோட்டார் இல்லங்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய மோட்டார் இல்லங்களில் ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதுவரை இறக்குமதி மோட்டார் இல்லங்களை விற்பனை செய்து வந்த பிசிபி நிறுவனம் தற்போது சொந்தமாக இதுபோன்ற மோட்டார் இல்லங்களை வடிவமைத்து விற்பனை செய்ய உள்ளது. இந்த புதிய மோட்டார் இல்லங்கள் குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

மஹிந்திரா ஜீனியோ

மஹிந்திரா ஜீனியோ

டெர்ரா என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த புதிய மோட்டார் இல்லங்கள் மஹிந்திரா ஜீனியோ மற்றும் இசுஸு டி மேக்ஸ் ஆகிய பிக்கப் டிரக்குகளின் அடிப்படையில் வடிவமைத்துக் கொடுக்கப்படுகின்றன.

இடவசதி

இடவசதி

டிரைவரை சேர்த்து 5 முதல் 7 பேர் வரை பயணிக்கும் வசதி கொண்டதாக கட்டமைக்கப்படுகிறது.

வசதிகள்

வசதிகள்

5 பேருக்கான படுக்கை வசதி, ஏசி, ஹீட்டர், ப்ரிட்ஜ், மைக்ரோவேவ் ஓவன், ஷவருடன் கூடிய குளியலறை, பொருட்களையும், துணிகளையும் வைப்பதற்கான அறைகள், சமையலுக்கான அடுப்பு, பாத்திரங்கள் வைப்பதற்கு இடவசதி கொடுக்கப்பட்டுள்ளன.

பொழுதுபோக்கு வசதி

பொழுதுபோக்கு வசதி

டிவி, ரேடியோ, எம்பி3 ப்ளேயர் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு சாதனங்களும் இருக்கின்றன.

ரிவர்ஸ் கேமரா

ரிவர்ஸ் கேமரா

கூடுதல் பாதுகாப்புக்காக ரிவர்ஸ் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

விலை

விலை

வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புக்கு ஏற்ப வசதிகளை செய்து கொடுப்பதாக பிசிபி தெரிவித்துள்ளது. மஹிந்திரா ஜீனியோ மற்றும் இசுஸு டி மேக்ஸ் பிக்கப் டிரக்குகளில் கூடுதல் வசதிகளை சேர்த்து மோட்டார் இல்லங்களாக மாற்றித் தருவதற்கு மட்டும் ரூ.31.83 லட்சம் முதல் ரூ.34.72 லட்சம் வரை செலவாகும் என்று பிசிபி தெரிவித்துள்ளது.

காத்திருப்பு காலம்

காத்திருப்பு காலம்

முன்பதிவு செய்தது முதல் 13 முதல் 15 வாரங்களில் மோட்டார் இல்லங்கள் டெலிவிரி கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு மாடல்

மற்றொரு மாடல்

முதுகு தண்டுவட பிரச்னை உள்ளவர்களுக்காகவும், வயோதிகர்களுக்கு ஏதுவாகவும், ஹைட்ராலிக் தொழில்நுட்பத்தில் இயங்கும் நாற்காலியை மாருதி ஈக்கோ காரில் பொருத்தி தருவதாகவும் பிசிபி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு ரூ.3.69 லட்சம் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 முதல் 12 வாரங்களில் டெலிவிரி கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 11, 2014, 13:30 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+