மாருதி டீசல் கார்களுக்கான பெட்ரோனாஸ் வழங்கும் பிரத்யேக எஞ்சின் ஆயில்!
உலகின் முன்னணி ஆயில் தயாரிப்பு நிறுவனமான பெட்ரோனாஸ் மாருதி நிறுவனத்தின் டீசல் கார்களுக்கான பிரத்யேக எஞ்சின் ஆயிலை சப்ளை செய்ய உள்ளது.
இதற்காக, இரு நிறுவனங்களுக்கு இடையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், நாடு முழுவதும் உள்ள மாருதி நிறுவனத்தின் 3,100 அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையங்களில் பெட்ரோனாஸ் ஆயில் பயன்படுத்தப்படும்.

மேலும், மாருதி நிறுவனத்தின் டீசல் கார்களுக்காக பிரத்யேக ஃபார்முலாவில் தயாரிக்கப்பட்ட சின்டியம் 3000 எஸ்இசட் எம்ஜிடிஓ 5W40 என்ற எஞ்சின் ஆயிலை பெட்ரோனாஸ் நிறுவனம் சப்ளை செய்ய உள்ளது.
நவீன தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட டீசல் எஞ்சின்களுக்கான இந்த பிரத்யேக எஞ்சின் ஆயில் நீடித்த உயவுத்தன்மையையும், அதிக வெப்பத்திலும் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துவதாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








