பியாஜியோவின் என்டி3 கான்செப்ட்... அடுத்த குவாட்ரிசைக்கிள்!

By Saravana

குவாட்ரிசைக்கிள் ரக வாகனங்களை அறிமுகப்படுத்துவதில் பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளன. அதில் ஒன்று இத்தாலியை சேர்ந்த பியாஜியோ நிறுவனம்.தனது எண்ணத்தை வெளிப்படுத்தும் விதமாக டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் என்டி- 3 என்ற புதிய குவாட்ரிசைக்கிள் ரக வாகனத்தின் கான்செப்ட்டை பார்வைக்கு வைத்திருந்தது.

2010ம் ஆண்டு மிலன் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த மாடல், 4 ஆண்டுகள் கடந்தும் இன்னும் தயாரிப்பு நிலையை எட்டவில்லை. மேலும், குவாட்ரிசைக்கிள் வாகனமாக நினைத்தும் இதனை பியாஜியோ வடிவமைக்கவில்லை. இந்தியாவில் இதுபோன்ற ஒரு வாகனத்துக்கு அனுமதி கொடுக்கப்பட உள்ளது என்பது தெரிந்தவுடன், அந்த கான்செப்ட்டை அப்படியே கொண்டு வந்து நிறுத்தியதாக தெரிகிறது.

3 சீட்டர்

3 சீட்டர்

பஜாஜ் ஆர்இ60 குவாட்ரிசைக்கிள் 4 சீட்டர் மாடல். ஆனால், பியாஜியோ காட்சிக்கு வைத்திருந்த கான்செப்ட் மாடல் 3 பேர் அமர்ந்து செல்லும் இருக்கை வசதியுடன் இருக்கிறது.

 எஞ்சின்

எஞ்சின்

என்டி3 கான்செப்ட்டில் 3 விதமான எஞ்சின்களை பியாஜியோ பொருத்தியுள்ளது. 230சிசி திறன் கொண்ட பெட்ரோல் எஞ்சின், 350சிசி பெட்ரோல் எஞ்சின் மற்றும் 350சிசி எஞ்சின் பெட்ரோல் எஞ்சினுடன் ஹைபிரிட் மாடலாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 மைலேஜ்

மைலேஜ்

பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 33 கிமீ மைலேஜையும், கிலோமீட்டருக்கு 70 கிராம் கார்பன் டை ஆக்சைடையும் வெளியிடும் தன்மை கொண்டதாக இருக்கும்.

 டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

உச்சபட்சமாக மணிக்கு 80 கிமீ வேகத்தில் இந்த என்டி3 குவாட்ரிசைக்கிள் செல்லும் என தெரிவிக்கப்படுகிறது.

விற்பனை

விற்பனை

இந்த புதிய என்டி3 குவாட்ரிசைக்கிளை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவது குறித்து எந்த தகவலையும் பியாஜியோ இதுவரை வெளியிடவில்லை. குவாட்ரிசைக்கிள் வாகனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கும் பட்சத்தில் இந்த புதிய என்டி3 கான்செப்ட்டை தயாரிப்பு நிலைக்கு பியாஜியோ கொண்டு செல்லக்கூடும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 12, 2014, 10:12 [IST]
English summary
Piaggio Vehicles, the Indian subsidiary of the Italian automaker, is one among the several companies eyeing the quadricycle pie in India once the segment is officially recognized.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+