விற்பனையில் சொதப்புவது எப்படி? ஹேட்ச்பேக் கார்கள் லிஸ்ட்!

By Saravana

இந்திய மார்க்கெட்டில் பல கார் நிறுவனங்கள் மிக நல்ல முன்னேற்றத்தை கண்டு வருவதற்கு பட்ஜெட் மாடல்கள் அல்லது ஹேட்ச்பேக் கார்களே முக்கிய காரணம். இந்திய கார் மார்க்கெட்டின் முதுகெலும்பாக விளங்கும் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் தற்போது எண்ணற்ற மாடல்கள் குவிந்துவிட்டன.

ஆனாலும், ஒரு சில பிராண்டுகளின் ஒரு சில மாடல்கள் மட்டுமே தொடர்ந்து தங்களது வெற்றியை பதிவு செய்து வருகின்றன. அதேசமயம், பல கார் மாடல்கள் விற்பனையில் படு மோசமாக சொதப்பி வருகின்றன. தங்களது நிறுவனத்துக்கு முக்கிய பங்களிப்பை கொடுக்க தவறியுள்ளன. அதில், கடந்த ஆண்டில் விற்பனையில் மிக மோசமான நிலையை பதிவு செய்த முன்னணி பிராண்டுகளின் தயாரிப்புகளை ஸ்லைடரில் காணலாம்.

செவர்லே செயில்

செவர்லே செயில்

கடந்த ஆண்டு விற்பனையில் சொதப்பிய கார்களில் செவர்லே செயில் யுவா காரும் ஒன்று. கடந்த ஆண்டு 7,296 செவர்லே செயில் யுவா கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. டீசல் மாடல் திரும்ப அழைக்கப்பட்டதும் செயில் யுவா விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தியது.

ஃபியட் புன்ட்டோ

ஃபியட் புன்ட்டோ

விற்பனைக்கு பிந்தைய சேவையில் இருக்கும் பிரச்னைகளினால், ஃபியட் புன்ட்டோ காரின் விற்பனையும் அதள பாதாளத்தில் இருந்தது. கடந்த ஆம்டு 6,430 புன்ட்டோ கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. புன்ட்டோவை நம்பி தற்போது பெரும் திட்டங்களோடு ஃபியட் நிறுவனம் டீலர்ஷிப் மற்றும் சர்வீஸ் மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. இதற்கு பலன் கிடைக்குமா என்பது இந்த ஆண்டு புன்ட்டோ விற்பனை மூலம் தெரிந்துவிடும்.

 ரெனோ பல்ஸ்

ரெனோ பல்ஸ்

நிசான் மைக்ராவின் ரீபேட்ஜ் மாடலாக வெளியிடப்பட்ட ரெனோ பல்ஸ் காரின் விற்பனையும் படுமோசமாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டு 4,791 பல்ஸ் கார்கள் மட்டுமே விற்பனையாகியது.

 செவர்லே ஸ்பார்க்

செவர்லே ஸ்பார்க்

பட்ஜெட் கார்களில் சிறந்த மாடல். இடவசதி, வசதிகளில் சிறப்பாகவும், 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் எல்பிஜி மாடல்களில் விற்பனை செய்யப்படும் இந்த காரும் விற்பனையில் மிக மோசமாக இருக்கிறது. கடந்த ஆண்டில் வெறும் 4,271 ஸ்பார்க் கார்கள் மட்டுமே விற்பனையாகியது.

ஸ்கோடா ஃபேபியா

ஸ்கோடா ஃபேபியா

கடந்த 2012ம் ஆண்டு இறுதியில் ஸ்கோடா ஃபேபியா கார் இந்திய மார்க்கெட்டில் இருந்து விலக்கிக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், விற்பனை நிறுத்தப்பட்டும் ஏராளமான கார்கள் ஸ்டாக் இருக்கின்றன. கடந்த ஆண்டு பல்வேறு முயற்சிகளுக்கு இடையில் 2,794 ஃபேபியா கார்களை ஸ்கோடா விற்பனை செய்துள்ளது. ஸ்கோடாவின் விற்பனைக்கு பிந்தைய சேவையில் இருக்கும் குளறுபடிகளே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 13, 2014, 10:26 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+