ஜூலையில் இந்தியா வரும் புதிய போர்ஷே மசான் எஸ்யூவி!
இந்த மாதம் வரும் என எதிர்பார்க்கப்பட்ட புதிய போர்ஷே மசான் சொகுசு எஸ்யூவி அடுத்த மாத மத்தியில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.
போர்ஷே கேயென் எஸ்யூவியைவிட விலை குறைவாக இருக்கும் என்பதால், கோடீஸ்வர வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில மாறுதல்கள்
இந்தியாவில் விற்பனைக்கு வரும் மாடலில் சில மாற்றங்கள் இருக்கும். அலாய் வீல்கள், எக்ஸ்சாஸ்ட் குழாய்கள் மற்றும் பேட்ஜ் போன்றவற்றில் மாற்றங்கள் இருக்கும்.

எஞ்சின் ஆப்ஷன்கள்
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் விற்பனைக்கு வருகிறது. மசான் டர்போ என்ற பெட்ரோல் மாடலில் 400 பிஎச்பி ஆற்றலையும், 500 என்எம் டார்க்கையும் அளிக்கும் 3.6 லிட்டர் வி6 பெட்ரோல் எஞ்சினும், டீசல் மாடலில் 258 பிஎச்பி ஆற்றலையும், 580 என்எம் டார்க்கையும் வழங்க வல்ல 3.0 லிட்டர் வி6 எஞ்சினும் பொருத்தப்பட்டிருக்கும். போர்ஷே 7 ஸ்பீடு பிடிகே கியர் பாக்ஸ் கொண்டிருக்கும்.

இறக்குமதி மாடல்
இந்தியாவில் இறக்குமதி செய்து புதிய போர்ஷே மசான் விற்பனை செய்யப்பட உள்ளது. இதனால், விலை அதிகமாக நிர்ணயிக்கப்படும் வாய்ப்புள்ளது.

விலை
ரூ.75 லட்சம் விலையில் இந்த புதிய போர்ஷே மசான் சொகுசு எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்படும் என தெரிகிறது.

போட்டியாளர்கள்
ஆடி க்யூ5, பிஎம்டபிள்யூ எக்ஸ்3, மெர்சிடிஸ் பென்ஸ் எம்எல் கிளாஸ் மற்றும் லேண்ட்ரோவர் எவோக் ஆகிய எஸ்யூவிகளுக்கு போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








