அடுத்தடுத்து தீப்பிடித்து எரிந்த போர்ஷே கார்கள்: வாடிக்கையாளர் அதிர்ச்சி!!
அடுத்தடுத்து இரண்டு போர்ஷே 911 ஜிடி3 கார்கள் தீப்பிடித்து எரிந்ததால், அந்த கார்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், அந்த கார்களுக்கு திரும்ப அழைப்பதாகவும் போர்ஷே அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளில் இரண்டு 2014 மாடல் போர்ஷே 911 ஜிடி3 கார்கள் சமீபத்தில் தீப்படித்து எரிந்தன. இதையடுத்து, தீ பிடித்ததற்கான காரணத்தை ஆய்வு செய்ய போர்ஷே நிறுவனம் சிறப்பு ஆய்வுக் குழுவினரை சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அனுப்பியுள்ளது.

விற்பனை செய்யப்பட்ட மொத்தம் 785 கார்களில் இந்த தீப்பிடிக்கும் ஆபத்து இருப்பதாக முதல் கட்டமாக கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த கார்களை திரும்ப அழைக்க இருப்பதாக போர்ஷே அறிவித்துள்ளது.
மேலும், 911 ஜிடி3 கார் மாடல்களை வைத்திருப்பவர்கள், தீப்பிடிக்கும் ஆபத்து இருப்பதால், அந்த கார்களை ஓட்ட வேண்டாம் என்று அந்த நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. இதுதவிர, 911 ஜிடி3 காரின் விற்பனையையும் நிறுத்தியுள்ளது.
அதிகபட்சமாக மணிக்கு 313 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்ட இந்த காரை 20 சதவீதத்தினர் தினசரி பயன்பாட்டுக்கும், 80 சதவீதத்தினர் பந்தய களத்திலும் பயன்படுத்துகின்றனர்.
தீப்பிடிப்பதற்கான காரணத்தை ஆய்வு செய்யும் முயற்சிகளையும் துரிதப்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. போர்ஷே 911 ஜிடி3 கார் ஜெர்மனியல் 1.37 யூரோ விலையிலும், அமெரிக்காவில் 1.30 லட்சம் டாலர் விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








