விற்பனைக்கு வரும் முன்னரே கார்களுக்கு முன்பதிவு: கார் கம்பெனிகள் மீது நடவடிக்கை

By Saravana

புதிய கார்களை விற்பனைக்கு கொண்டு வரப்படுவதற்கு முன்னரே முன்பதிவு செய்யும் கார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

புதிய கார் மாடல்கள் அறிமுகம் செய்யபப்படும்போது, அந்த கார்கள் மீது வாடிக்கையாளர்களுக்கு அதிக ஆர்வத்தை தூண்டும் வகையில், பல்வேறு யுக்திகளை கார் நிறுவனங்கள் செயல்படுத்தி வருகின்றன.

Maruti Ciaz

அந்த வகையில், கார்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதற்கு முன்னரே முன்பதிவு செய்யும் வழக்கத்தை பல கார் நிறுவனங்கள் கையாண்டு வருகின்றன. சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட மாருதி சியாஸ் செடான் காருக்கு கூட விற்பனைகக்கு அறிமுகம் செய்யும் தினத்திற்கு முன்னர் வரை 10,000 முன்பதிவுகளை பெற்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், புதிய கார்களை விற்பனைக்கு கொண்டு வரப்படுவதற்கு முன்னரே முன்பதிவு செய்வது நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி, தவறாகும். இதனை குறிப்பிட்டு வந்த புகார்களின் அடிப்படையில் முன்னள் ரயில்வே அமைச்சரும், தற்போதைய எம்பி.,யுமான தினேஷ் திரிவேதி மத்திய நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சரிடம் புகார் அளித்துள்ளார்.

காரை பற்றி முழுமையானத் தகவல்களை வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்காமல், ஏன் காரை கூட கண்ணில் காட்டாமல், அவர்களிடமிருந்து முன்பணத்தை பெறுவது தவறான செயல் என்றும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறும் தனது புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, புதிய கார்களுக்கு முன்பதிவு செய்யும் கார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. மாருதி உள்ளிட்ட பல கார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை பாயும் என எதி்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, October 9, 2014, 13:05 [IST]
English summary
Many car makers in India start accepting bookings for a new car before it is officially launched. This practice according to Consumer Protection Act is an unfair trade practice.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+