மல்டி கலரில் கிறங்கடிக்கும் லம்போ சூப்பர் கார்?!
கார்களில் வினைல் பேப்பர் ஒட்டும் கலாச்சாரம் வேகமாக பரவி வருகிறது. மிக எளிதாக காரை விரும்பிய வண்ணத்தில் உடனடியாக மாற்றிக் கொள்ள முடியும் என்பது இதன் சிறப்பு.
இந்த நிலையில், ஸ்லைடரில் காணப்போகும் லம்போர்கினி கார் வினைல் ரேப்பிங் மூலம் பல்வண்ண கலரில் மாற்றப்பட்டுள்ளது. அதனை ஸ்லைடரில் காணலாம்.

மலேசிய கார்
மலேசியாவில் லம்போர்கினி கல்லார்டோ கார் உரிமையாளர் ஒருவர் தனது காரை வினைல் ரேப்பிங் மூலம் வானவில் நிறத்தில் மாற்றியுள்ளார்.

வினைல் ரேப்பிங்
மோட்டார்ஸ்போர்ட் பிளேகிரவுண்ட் என்ற நிறுவனம் இந்த வினைல் ரேப்பிங்கை மிக அழகாக செய்து கொடுத்துள்ளது. இது காண்போரை கவர்வதாக இருக்கிறது.

இந்தியாவிலும்...
வினைல் ரேப்பிங் செய்யும் நடைமுறை இந்திய கார் வாடிக்கையாளர்களிடமும் வேகமாக பரவி வருகிறது. பல வாடிக்கையாளர்கள் வினைல் ரேப்பிங் செய்து தங்களது காருக்கு அழகு சேர்க்க விரும்புகின்றனர்.

3எம் நிறுவனம்...
இதுபோன்று காரை வினைல் ரேப்பிங் செய்வதில் 3எம் நிறுவனம் சிறப்பாக செய்து வருகிறது. கார்களில் ஒட்டப்படும் வினைல் ரேப்பிங்கை பெயிண்ட்டுக்கு சேதம் இல்லாமல் எளிதாக நீக்க முடியும் என்பதும் இதன் சிறப்பம்சமாக உள்ளது.

அழகை கூட்டுகிறதா?
வினைல் ரேப்பிங் மூலம் லம்போர்கினி காரின் அழகு கூடியுள்ளதா அல்லது கெட்டு போய்விட்டதாக உணர்கிறீர்களா? கருத்தை எழுதுங்கள்.


Click it and Unblock the Notifications








