புதிய புகாட்டி வேரோன் ஸ்பெஷல் எடிசன் காரின் ஆல்பம்!!
மொத்தமாக 450 புகாட்டி வேரோன் கார்கள் மட்டுமே விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 400க்கும் மேற்பட்ட புகாட்டி வேரோன் கார்கள் விற்பனை செய்யப்பட்டுவிட்டன. இந்த நிலையில், சந்தை போட்டி காரணமாக மீதமுள்ள 50 புகாட்டி வேரோன் கார்களை விற்பனை செய்வதில் அந்த நிறுவனத்துக்கு சிக்கல் எழுந்துள்ளது.
இதைத்தவிர்த்துக் கொள்ளும் விதத்தில் புகாட்டி நிறுவனத்துடன் தொடர்புடைய மற்றும் புகாட்டியுடன் இணைந்து பணியாற்றிய பிரபலங்களின் பெயர்களில் புகாட்டி வேரோன் கார்கள் ஸ்பெஷல் எடிசன் மாடலாக ஒன்றன் பின் ஒன்றாக அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை புகாட்டியின் கார் பந்தய அணியின் பிரபலங்களின் பெயர்களில் மூன்று ஸ்பெஷல் எடிசன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு விட்டன.
இதைத்தொடர்ந்து, தற்போது புகாட்டி நிறுவனர் எட்டோர் புகாட்டியின் சகோதரர் ரெம்பிராண்ட் புகாட்டி பெயரில் புதிய ஸ்பெஷல் எடிசன் மாடல் வந்துள்ளது. இந்த கார் தற்போது ஜெனீவா மோட்டார் ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. சாக்லேட் வண்ணத்தில் மயக்கும் இந்த ஸ்பெஷல் எடிசன் காரில் இடம்பெற்றிருக்கும் சிறப்பம்சங்கள் மற்றும் சுவாரஸ்யங்களை ஸ்லைடரில் காணலாம்.

சிற்ப கலை நிபுணர்
புகாட்டியின் நிறுவனர் எட்டோர் புகாட்டியின் சகோதரர் ரெம்பிராண்ட் சிறந்த சிற்ப கலை வல்லுனர். வனவிலங்கு சிற்பங்களை உருவாக்கி புகழ்பெற்றவர். அவர் உருவாக்கிய நடன யானை சிற்பம்தான் புகாட்டி கார் நிறுவனத்தின் சின்னமாக பின்னாளில் பயன்படுத்தப்பட்டது. அவரை கவுரவிக்கும் விதத்தில் இந்த ஸ்பெஷல் எடிசன் வெளியிடப்பட்டுள்ளது.

அலங்கரித்த சின்னம்
1927ம் ஆண்டு முதல் 1933 வரை தயாரிக்கப்பட்ட புகாட்டி ராயல் டைப் 41 காரின் ரேடியேட்டர் மூடியின்மீது இந்த நடன யானை சிற்பம் கொடுக்கப்பட்டிருந்தது. அதே நடன யானை உருவம் தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் ஸ்பெஷல் எடிசன் வேரோன் காரிலும் பொறிக்கப்பட்டிருக்கிறது. ரெம்பிராண்ட்டின் கலை நுணுக்கத்தை போற்றும் வகையில் இந்த உருவம் பொறிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரட்டை வண்ணம்
இந்த ஸ்பெஷல் எடிசன் கார் இரட்டை வண்ணக் கலவையில் அசத்துகிறது. உட்புறத்திலும் அதே வண்ணக் கலை பயன்படுத்தப்பட்டுள்ளது.

டோர் சில் கார்டு
டோர் சில் கார்டில் ரெம்பிராண்ட் உருவம் மற்றும் அவரது கையெழுத்து பொறிக்கப்பட்டிருக்கிறது.

நடன யானை
கதவிலும் நடன யானை சின்னம் கொடுக்கப்பட்டிருக்கிறது. உயர்ரக லெதர் இருக்கைகள், வசதிகள் கொண்ட பெர்ஃபார்மென்ஸ் கார் வாடிக்கையாளர்களையும் இந்த ஜெனீவா மோட்டார் ஷோ மூலம் பெறும் என்று நம்பப்படுகிறது.

லிமிடேட் எடிசன்
ரெம்பிராண்ட் புகாட்டி ஸ்பெஷல் எடிசன் மாடல் 2.18 மில்லியன் யூரோ விலையில் விற்பனைக்கு கிடைக்கும். மொத்தம் 3 கார்கள் மட்டுமே ரெம்பிராண்ட் புகாட்டி பெயரில் விற்பனை செய்யப்பட உள்ளன.

கார் ஆல்பம்
இந்த ஸ்பெஷல் எடிசன் காரின் புகைப்பட ஆல்பத்தை எங்களது ஃபேஸ்புக் பக்கத்தில் கண்டு ரசிக்கலாம்.


Click it and Unblock the Notifications








