அக்டோபரில் வருகிறது 4 வீல் டிரைவ் சிஸ்டத்துடன் ரெனோ டஸ்ட்டர்
வரும் அக்டோபரில் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட ரெனோ டஸ்ட்டர் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. டஸ்ட்டரை வாங்க வரும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் 4 வீல் டிரைவ் சிஸ்டம் மாடலை விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, 4 வீல் டிரைவ் மாடலை இந்தியாவில் களமிறக்க ரெனோ முடிவு செய்துள்ளது. இது டஸ்ட்டர் விரும்பிகளுக்கு மிக மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

ஏற்கனவே உற்பத்தி
சென்னையிலுள்ள நிசான்- ரெனோ கூட்டணி ஆலையில் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட டஸ்ட்டர் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. டேஸியா பிராண்டில் உற்பத்தி செய்யப்படும் அந்த 4 வீல் டிரைவ் டஸ்ட்டர்கள் இங்கிலாந்து மார்க்கெட்டுக்கு சென்று கொண்டிருக்கிறது.

எஞ்சின்
4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடல் 110 பிஎஸ் பவர் கொண்ட டஸ்ட்டரின் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மாடலில் கிடைக்கும். 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டதாக இருக்கும்.

நிசான் தொழில்நுட்பம்
நிசான் எக்ஸ்ட்ரெயில் எஸ்யூவியில் இருக்கும் அதே 4 வீல் டிரைவ் சிஸ்டம்தான் டஸ்ட்டரிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

கூடுதல் ஆக்சஸெரீஸ்கள்
டஸ்ட்டர் அட்வென்ச்சர் எடிசனில் உள்ளது போன்றே 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட டஸ்ட்டரில் பம்பர் புரொடெக்டர், பாடியை சுற்றிலும் பிளாஸ்டிக் கிளாடிங்குகள் கொடுக்கப்பட்டிருக்கும்.

நிசான் டெரானோவிலும்...
ரெனோ டஸ்ட்டரைத் தொடர்ந்து அதன் ரீபேட்ஜ் மாடலாக விற்பனையில் இருக்கும் நிசான் டெரானோ எஸ்யூவியிலும் 4 வீல் டிரைவ் மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








