விற்பனை மந்தம்... 4 வீல் டிரைவ் டஸ்ட்டரை களமிறக்கும் ரெனோ!
விற்பனையை அதிகரிக்கும் விதத்தில், 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட டஸ்ட்டரை விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது ரெனோ கார் நிறுவனம். இதனை ரெனோ இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுமித் ஷானி உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த 2012ல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட டஸ்ட்டர் தற்போது 2 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடலில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஈக்கோஸ்போர்ட், ஸ்கார்ப்பியோவில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை தீர்த்துக் கொள்வதற்காக 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடலை அறிமுகம் செய்ய ரெனோ திட்டமிட்டுள்ளது. 4 வீல் டிரைவ் டஸ்ட்டரின் சில முக்கிய அம்சங்கள் ஸ்லைடரில் கொடுக்கப்பட்டுள்ளன.

டீசலில் மட்டும்
இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் ஏற்கனவே பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரு மாடல்களிலும் 4 வீல் டிரைவ் கொண்ட டஸ்ட்டர் மாடல் விற்பனையில் இருக்கிறது. ஆனால், இந்தியாவில் 1.5 லிட்டர் எஞ்சின் கொண்ட டீசல் மாடலில் மட்டுமே டஸ்ட்டரின் 4 வீல் டிரைவ் மாடல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் 107 எச்பி பவரையும், 240 என்எம் டார்க்கையும் அளிக்கும்.

கிரவுண்ட் கிளியரன்ஸ்
2 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடலைவிட 4 வீல் டிரைவ் மாடல் 5 மிமீ கூடுதல் கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாக இருக்கும். அதாவது, 210 மிமீ கிரவுண்ட் கிளிரயன்ஸ் கொண்டதாக வரும்.

பே லோடு
2 வீல் டஸ்ட்டரின் பே லோடு 456 கிலோவாக இருக்கும் நிலையில், 4 வீல் டிரைவ் சிஸ்டம் டஸ்ட்டரின் 458 கிலோவாக இருக்கும்.

இழுவை திறன்
2 வீல் டிரைவ் டஸ்ட்டர் 615 கிலோ எடை இழுவை திறன் கொண்டது. 4 வீல் டிரைவ் டஸ்ட்டர் 660 கிலோ எடை இழுவை திறன் கொண்டது.

விலை
2 வீல் டிரைவ் மாடலின் டாப் வேரியண்ட் ரூ.11.79 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்கப்படுகிறது. அதேநேரத்தில், 4 வீல் டிரைவ் மாடல் ரூ.1 லட்சம் கூடுதலான விலையில் வரும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications








