ரெனோ டஸ்ட்டரின் பிரிமியம் பிக்கப் டிரக் கான்செப்ட் அறிமுகம்
பிரேசில் நாட்டின் சாவ் பாவ்லோ நகரில் நடந்து வரும் ஆட்டோமொபைல் கண்காட்சியில் ரெனோ டஸ்ட்டர் அடிப்படையிலான புதிய பிக்கப் டிரக் கான்செப்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
2012ம் ஆண்டு சாவ் பாவ்லோ நகரில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த டஸ்ட்டர் டி- கிராஸ் கான்செப்ட்டின் தாத்பரியங்களும் இந்த புதிய கான்செப்ட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளன. ரெனோ டஸ்ட்டர் ஓரோக் என்ற பெயரில் பிரிமியம் ரகத்திலான இந்த புதிய பிக்கப் டிரக்கின் படங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

பிக்கப் டிரக் சந்தை
பிரேசில் உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளின் சந்தையில் வர்த்தக வாகன விற்பனையில் இதுபோன்ற பிக்கப் டிரக்குகளின் விற்பனை 75 சதவீத பங்களிப்பை வழங்கி வருகின்றன. எனவே, இரண்டு புதிய பிக்கப் டிரக் மாடல்களை தென் அமெரிக்காவில் அறிமுகம் செய்ய இருப்பதாக ரெனோ நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், இந்த புதிய கான்செப்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சுற்றுலாவுக்கான மாடல்
இந்த பிக்கப் டிரக் மாடலில் 5 பேர் தாராளமாக அமர்ந்து பயணிக்க முடியும். மேலும், குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வதற்கான சிறப்பு வசதிகளுடன் இந்த பிக்கப் டிரக் மாடல் இருக்கும் என குறிப்பிடப்படுகிறது.

வண்ணம்
தற்போது வெளியிடப்பட்டிருக்கும் புதிய பிக்கப் டிரக் கான்செப்ட் மாடல் வெள்ளை நிறத்தில், ஆரஞ்ச் வண்ண அலங்காரம் கொண்டதாக இருக்கிறது. கூரை மற்றும் பின்புற பெட் பகுதி மற்றும் சக்கரங்கள் கருப்பு நிறத்தில் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. இதன் அலாய் வீல் டிசைன் மிக கவர்ச்சியாக இருக்கிறது.

இதர அம்சங்கள்
பனரோமிக் ரூஃப், ரூஃப் ரெயில்கள், 18 இஞ்ச் அலாய் வீல்கள், 255/60 டயர்கள் போன்றவையும் குறிப்பிடத்தக்க அம்சங்களாக இருக்கின்றன. பின்புறத்தில் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

இன்டிரியர்
கருப்பு நிறத்தில் சிவப்பு வண்ண அலங்காரம் கொண்ட இன்டிரியருடன் இதனை பிரிமியம் மாடலாக பரைசாற்றுகிறது. சிறப்பான டிசைன் கொண்ட 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல்,ஸ்போரட்ஸ் இருக்கைகள் என மிக அலங்காரமாக காட்சியளிக்கிறது.


Click it and Unblock the Notifications








