புதிய குட்டிக் கார் ரிலீஸ் எப்போது? மவுனம் கலைத்த ரெனோ!

By Saravana

டஸ்ட்டர் விற்பனை கொடுத்த உற்சாகம் கலைந்து கொண்டிருக்க, இந்திய மார்க்கெட்டில் நிலையான இடத்தை பெறுவதற்கு புதிய குட்டிக் காரை ரெனோ அறிமுகம் செய்ய உள்ளது.

பல்ஸ் காரைவிட குறைவான விலையில் வரும் இந்த புதிய ரெனோ குட்டிக் கார் டட்சன் கோ, ஆல்ட்டோ கே10 கார்களின் மார்க்கெட்டில் நிலைநிறுத்தப்பட உள்ளது. மேலும், இந்த புதிய குட்டிக் கார் வருகை குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை ரெனோ இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை அதிகாரியுமான சுமித் ஷானி சமீபத்தில் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார்.


அறிமுகம் எப்போது?

அறிமுகம் எப்போது?

அடுத்த ஆண்டு மத்தியில் இந்த புதிய குட்டிக் காரை மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ரெனோ திட்டமிட்டுள்ளது.

விலை?

விலை?

ரெனோவின் பல்ஸ் ஹேட்ச்பேக் கார் ரூ.4.42 லட்சம் முதலான ஆரம்ப விலையில் கிடைக்கிறது. ஆனால், புதிய குட்டிக் கார் இதைவிட குறைவாக, அதாவது ரூ.4 லட்சத்திற்குள் விலை கொண்டதாக வருகிறது.

 உற்பத்தி வசதி

உற்பத்தி வசதி

சென்னையிலுள்ள நிசான்- ரெனோ கூட்டணி ஆலையில்தான் இந்த புதிய கார் உற்பத்தி செய்யப்படும். மேலும், புதிய குட்டிக் காரை உற்பத்தி செய்யும் பொருட்டு, சென்னை ஆலையின் உற்பத்தி திறனை ரெனோ அதிகரிக்க உள்ளது.

டீலர்ஷிப் கட்டமைப்பு

டீலர்ஷிப் கட்டமைப்பு

சிறிய கார் மார்க்கெட்டில் வெற்றி பெறுவதற்கு வலுவான டீலர்ஷிப் கட்டமைப்பு அவசியம். எனவே, இந்த ஆண்டு இறுதிக்குள் டீலர்ஷிப் எண்ணிக்கையை 125லிருந்து 170ஆக அதிகரித்துக்கொள்வதற்கு ரெனோ திட்டமிட்டுள்ளது.

லட்சியம்

லட்சியம்

புதிய குட்டிக் கார் மூலம் இந்திய மார்க்கெட்டில் 5 சதவீத பங்களிப்பை பெறுவதற்கு ரெனோ இலக்கு வைத்துள்ளது.

குறிப்பு: மாதிரிக்காக ரெனோ பல்ஸ் காரின் படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 11, 2014, 12:37 [IST]
English summary
Renault India is preparing a new small car that will be placed beneath the Pulse hatchback, which is a rebadged Nissan Micra. The revelation was made by Sumit Sawhney, managing director and chief executive, during an interview given to LiveMint.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+