லிட்டருக்கு 100கிமீ மைலேஜ் தரும் ரெனோ கார்: குறைவான விலை மாடல்!

லிட்டருக்கு 100கிமீ மைலேஜ் தரும் ஃபோக்ஸ்வேகன் எக்ஸ்எல்-1 காருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது தெரிந்ததே. இந்த கார் 1.70 லட்சம் அமெரிக்க டாலர் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், 20,000 டாலர் விலையில் லிட்டருக்கு 100கிமீ மைலேஜ் தரும் காரை ரெனோ கார் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முந்துங்கள்... இச்சலுகை விலை ஸ்டாக் உள்ளவரை மட்டுமே!

கடந்த மாதம் நடந்த பாரீஸ் மோட்டார் ஷோவில் ரெனோ இயோலேப்(EOLAB) என்ற இந்த புதிய கான்செப்ட் மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இது தயாரிப்பு நிலைக்கு கொண்டு செல்லப்படுமா என்பது குறித்த தகவல் இல்லாததால், இந்த கார் மீது ஆர்வம் காட்டப்படவில்லை. இந்தநிலையில், இந்த புதிய கான்செப்ட் மாடல் உற்பத்திக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களால், தற்போது உலக அளவில் ஆர்வம் தொற்றிக் கொண்டுள்ளது.


புரோட்டோடைப் மாடல்

புரோட்டோடைப் மாடல்

இந்த காரின் புரோட்டோடைப் மாடல் லிட்டருக்கு 100கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு கிலோமீட்டருக்கு வெறும் 22கிராம் கரியமில வாயுவை வெளியிடும். இதனால், சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாக கருதலாம்.

ஹைபிரிட் மாடல்

ஹைபிரிட் மாடல்

பெட்ரோல் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் துணையுடன் இயங்கும் ஹைபிரிட் எரிபொருள் தொழில்நுட்பம் கொண்டது இயோலேப். இந்த காரில் 1.01 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மர்றும் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 74 பிஎச்பி பவரையும், எலக்ட்ரிக் மோட்டார் 67பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். ஒரே நேரத்தில் 141பிஎச்பி பவரையும், 200என்எம் டார்க்கையும் அளிக்கும்.

 டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

அதிக மைலேஜ் தரும் வகையில், இந்த காருக்கு 118.4 கிமீ வேகத்தை தாண்டாதவாறு வேக வரம்பு எலக்ட்ரானிக் முறையில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும்.

 இலகு எடை பாகங்கள்

இலகு எடை பாகங்கள்

கூரை மெக்னீசியத்திலும், கதவுகள் அலுமினியத்திலும், பானட் தெர்மோபிளாஸ்ட்டிலும் தயாரிக்கப்பட்டிருக்கிறது. மேலும், சிறப்பான ஏரோடைனமிக் டிசைன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ரெனோ நிறுவனத்தின் டிசைன் வல்லமைக்கு எடுத்துக்காட்டாக அறிமுகம் செய்யப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

 ஏரோடைனமிக் அம்சங்கள்

ஏரோடைனமிக் அம்சங்கள்

இந்த கார் 64 கிமீ வேகத்தை தாண்டினால், காரின் உயரம் 4 இஞ்ச் வரை குறைந்து காற்றினால் ஏற்படும் தடங்கலை குறைக்கும். ரியர் பம்பரில் இருக்கும் ஃப்ளாப்புகளும் திறந்துகொண்டு காற்றோட்டத்தில் தடங்கலை குறைக்கும்.

விலை

விலை

ரெனோ கிலியோ டீசல் காரின் விலையையொட்டியதாக இதன் விலை இருக்கும். அதாவது, 23,900 டாலர் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 4, 2014, 11:14 [IST]
English summary
Renault might be offering a production version of the Eolab Concept which was officially presented to the public recently.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+