மேம்படுத்தப்பட்ட ரெனோ ப்ளூயன்ஸ் கார் விற்பனைக்கு வந்தது!
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ரெனோ ப்ளூயன்ஸ் காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் இன்று விற்பனைக்காக அறிமுகம் செய்யப்பட்டது.
சர்வதேச மார்க்கெட்டில் ஏற்கனவே விற்பனைக்கு வந்துவிட்ட இந்த புதிய மாடல் இந்திய வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அம்சங்களை கொண்டுள்ளது.

எஞ்சின்
137 பிஎஸ் பவரையும், 190 என்எம் டார்க்கையும் அளிக்கும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 110 பிஎஸ் பவரையும், 240 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1.5 லிட்டர் கே9கே டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

டிரான்ஸ்மிஷன்
இந்தத காரில் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது.

மைலேஜ்
லிட்டருக்கு 20.4 கிமீ மைலேஜ் தரும் என்று அராய் சான்று தெரிவிக்கிறது.

டிசைன்
மறுவடிவமைப்பு பெற்ற முகப்பு, புதிய ஹெட்லைட், டெயில்லைட்டுகள் என சிறிய மாற்றங்களுடன் அதிக வனப்பு கொண்டதாக மாறியிருக்கிறது. புதிய 16 இஞ்ச் அலாய் வீல்களும் தோற்றத்துக்கு கூடுதல் பொலிவு சேர்க்கிறது.

விலை
ரூ.14.22 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய ரெனோ ப்ளூயன்ஸ் விற்பனைக்கு கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








