ஜனவரியிலிருந்து ரெனோ கார் விலையும் உயர்கிறது!
ஜனவரி முதல் ரெனோ கார்களின் விலை இரண்டரை சதவீதம் உயர்த்தப்பட உள்ளது.
உற்பத்தி செலவீனம் அதிகரித்துள்ளதை கருதி, அனைத்து கார் நிறுவனங்களும் கார்களின் விலையை கணிசமாக உயர்த்தி வருகின்றன.

இந்த வரிசையில், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனோவும் தற்போது விலை உயர்வை அறிவித்துள்ளது.
உற்பத்தி செலவீனம் கணிசமாக அதிகரித்துள்ளதையடுத்து, இந்த விலை உயர்வு முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அந்த நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் பல்ஸ், ஸ்காலா, டஸ்ட்டர், புளூயன்ஸ், கோலியோஸ் உள்ளிட்ட அனைத்து ரெனோ கார்களின் விலையும் உயர இருக்கிறது.


Click it and Unblock the Notifications








