ரெனோ பல்ஸ், ஸ்காலா, டஸ்ட்டருக்கு அதிரடி சலுகைகள் - விபரம்!

தீபாவளி சீஸன் விற்பனை முடிந்ததால் தொய்வு கண்டிருக்கும் விற்பனையை அதிகரிக்கும் முயற்சியாக அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது ரெனோ கார் நிறுவனம்.

பல்ஸ், ஸ்காலா கார்களின் டீசல் மாடல்கள் தற்போது பெட்ரோல் மாடல்களின் இணையான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், கூடுதல் சலுகைகளையும் வழங்குகிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.


சலுகை விபரம்

சலுகை விபரம்

ஒவ்வொரு காருக்கும் ரெனோ வழங்கும் சலுகை விபரங்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

ரெனோ பல்ஸ்

ரெனோ பல்ஸ்

ரெனோ பல்ஸ் டீசல் மாடலின் ஆர்எஸ்எல் வேரியண்ட் ரூ.5.19 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும். அதாவது, பல்ஸ் காரின் பெட்ரோல் மாடலுக்கு இணையான விலையில் தற்போது விற்பனைக்கு கிடைக்கிறது. அத்துடன், கூடுதலாக இரு ஆண்டுகளுக்கான வாரண்டியும், 4 ஆண்டுகளுக்கான சாலை அவசர உதவி சேவையையும் இலவசமாக வழங்குவதாக தெரிவிக்கிறது.

ரெனோ பல்ஸ் - முழு விபரம்

ரெனோ ஸ்காலா

ரெனோ ஸ்காலா

பல்ஸ் போன்ற ரெனோ ஸ்காலா செடான் டீசல் மாடலின் ஆர்எக்ஸ்எல் வேரியண்ட் ரூ.8,01,000 எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும். அத்துடன் கூடுதலாக இரண்டு ஆண்டுகளுக்கான வாரண்டியும், 4 ஆண்டுகளுக்கான சாலை அவசர உதவி சேவை திட்டத்தையும் இலவசமாக பெறலாம்.

ரெனோ ஸ்காலா - முழு விபரம்

ரெனோ ஃப்ளூயன்ஸ்

ரெனோ ஃப்ளூயன்ஸ்

ரெனோ ஃப்ளூயன்ஸ் காருக்கு 4 ஆண்டுகளுக்கான சாலை அவசர உதவி சேவை திட்டத்தையும், கூடுதலாக இரண்டு ஆண்டுகளுக்கான வாரண்டியையும் இலவசமாக வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

ரெனோ ஃப்ளூயன்ஸ்- முழு விபரம்

ரெனோ டஸ்ட்டர்

ரெனோ டஸ்ட்டர்

டஸ்ட்டர் எஸ்யூவிக்கு ஆண்டு கடைசியையொட்டி இரண்டுவிதமான ஆஃபர்களை ரெனோ வழங்குகிறது. டஸ்ட்டர் டீசல் மாடலின் ஆர்எக்ஸ்எல் வேரியண்ட் தற்போது ரூ.9.29 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் பெற்றுக் கொள்ளலாம். இதேபோன்று, சமீபத்தில் விற்பனைக்கு வந்த டஸ்ட்டர் ஆல் வீல் டிரைவ் மாடலின் ஆர்எக்ஸ்எல் வேரியண்ட் தற்போது ரூ.11.29 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் வாங்க முடியும். பிற மாடல்களை போன்று கூடுதலாக இரண்டு ஆண்டுகளுக்கான வாரண்டி, 4 ஆண்டுகளுக்கான சாலை அவசர உதவி சேவை திட்டத்தை இலவசமாக பெறலாம்.

ரெனோ டஸ்ட்டர் - முழுமையானத் தகவல்கள்

ரெனோ கோலியோஸ்

ரெனோ கோலியோஸ்

ரெனோ கோலியோஸ் பிரிமியம் எஸ்யூவி மாடலுக்கு கூடுதலாக இரண்டு ஆண்டுகளுக்கான வாரண்டியும், 4 ஆண்டுகளுக்கான சாலை அவசர உதவி திட்ட சேவையை இலவசமாக பெறலாம். இவை அனைத்தும் குறுகிய கால சலுகைகளை அமலில் இருக்கும்.

ரெனோ கோலியோஸ்- முழுமையானத் தகவல்கள்

More from DriveSpark

Article Published On: Wednesday, November 12, 2014, 18:00 [IST]
English summary
The festive season has ended and several manufacturers did not achieve phenomenal sales. Renault India has now opted to provide offers on selected models. There are offers on Duster, Pulse, Scala, Fluence and Koleos models.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+