விற்பனையில் தோள் கொடுக்க டஸ்ட்டருடன் இணையும் புதிய ரெனோ கார்கள்!
தற்போது டஸ்ட்டர் விற்பனையால் இந்திய மார்க்கெட்டில் ரெனோ தாக்குப் பிடித்து வருகிறது. போட்டி அதிகரித்து வருவதால் டஸ்ட்டரின் விற்பனையிலும் சுணக்கம் காணப்படுகிறது.
எனவே, டஸ்ட்டரை மட்டும் நம்பியிருக்காமல் புதிய கார் மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த ரெனோ பரபரக்கிறது. அந்த பட்டியலில் தற்போது ஒரு புதிய ஹேட்ச்பேக் காரும், புதிய எம்பிவி காரும் இடம்பெற்றுள்ளன. இந்த புதிய மாடல்கள் வந்தால் நிச்சயம் டஸ்ட்டரை மட்டுமே ரெனோ நம்பியிருக்க வேண்டியதில்லை.

புதிய மாடல்கள்
அடுத்த ஆண்டு ரூ.4 லட்சத்திற்குள் ஆரம்ப விலை கொண்ட புதிய ஹேட்ச்பேக் காரையும், மாருதி எர்டிகா எம்பிவி காருக்கு இணையான ரகத்தில் புதிய எம்பிவி காரையும் அறிமுகப்படுத்த ரெனோ திட்டமிட்டுள்ளது. அந்த இரண்டு கார்களை பற்றிய கூடுதல் விபரங்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் தொடர்ந்து காணலாம்.

புதிய ஹேட்ச்பேக்
CMF-A என்ற புதிய மாடுலர் பிளாட்ஃபார்மில் எக்ஸ்பிஏ என்ற பெயரில் புதிய ஹேட்ச்பேக் கார் வடிவமைக்கப்படுகிறது. இந்த புதிய பிளாட்ஃபார்மில் வடிவமைக்கப்படம் முதல் கார் மாடலும் என்பதுடன், இந்திய சந்தைக்கு அவசியமான மாடலும் கூட. டட்சன் கோ காரை விட சிறிது கூடுதல் விலையில் வருகிறது. அதாவது, ஆரம்ப விலை ரூ.4 லட்சத்திற்குள் இருக்கும்.
Photo Credit: Automotivas

புதிய பெட்ரோல் எஞ்சின்
எக்ஸ்பிஏ என்ற குறியீட்டுப் பெயரிலான இந்த புதிய ஹேட்ச்பேக் காரில் ரெனோவின் புதிய 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இது அதிக எரிபொருள் சிக்கனம் கொண்டதாக இருக்கும். அடுத்தடுத்த ஸ்லைடுகளில் புதிய எம்பிவி காரின் தகவல்களை காணலாம்.
Photos Credit: Automotivas

ரீபேட்ஜ் எம்பிவி மாடல்
டேஸியா பிராண்டில் விற்பனை செய்யப்படும் லாட்ஜி எம்பிவி காரை ரீபேட்ஜ் செய்து ரெனோ தனது பிராண்டில் வெளியிட முடிவு செய்துள்ளது. இந்த புதிய இன்டிரியர் உள்ளிட்ட பல பாகங்கள் டஸ்ட்டரை ஒத்திருக்கும் என்பதால் உற்பத்தி செலவீனத்தில் அதிக மிச்சம் ஏற்படும். எனவே, போட்டியாளர்களுக்கு சவால் கொடுக்கும் விலையில் கொண்டு வரப்பட உள்ளது.

எஞ்சின்
டஸ்ட்டரின் எஞ்சின் ஆப்ஷன்களுடன் இந்த புதிய எம்பிவி கார் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. குறிப்பாக, டீசல் மாடலில் ரெனோவின் பிரபல்யமான 1.5 லிட்டர் கே9கே எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இது 85 பிஎஸ் பவரை அளிக்கும் திறன் கொண்டதாக இருக்கும். விரைவில் வரும் ஹோண்டா மொபிலியோ, மாருதி எர்டிகாவை குறித்து நிலைநிறுத்தப்படும்.


Click it and Unblock the Notifications








