ரெனோ டஸ்ட்டருக்கு அதிரடி சலுகை... பேஸ் மாடலின் விலை ரூ.50,000 குறைப்பு

By Saravana

பண்டிகை காலத்தில் ரெனோ டஸ்ட்டர் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான தள்ளுபடி மற்றும் சலுகைகள் காத்திருக்கிறது. டீலர்களின் கவர்ச்சிகரமான சலுகை அறிவிப்புகள் போன்று இல்லாமல், ரெனோ நிறுவனமாக இந்த சலுகைகளை நேரடியாக வழங்குகிறது.

மேலும், டஸ்ட்டர் டீசல் பேஸ் மாடலின் விலையும் ரூ.50,000 வரை குறைக்கப்பட்டிருப்பதால், வாடிக்கையாளர்கள் அதிகபட்ச சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை டஸ்ட்டர் எஸ்யூவிக்கு பெறும் சூழல் இருக்கிறது. அதன் விபரங்களை விரிவாக ஸ்லைடரில் காணலாம்.


விலை குறைப்பு

விலை குறைப்பு

ரெனோ டஸ்ட்டர் டீசல் மாடல் விலை குறைப்பு செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம், பேஸ் வேரியண்ட்டின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.8.70 லட்சத்திலிருந்து ரூ.8.18 லட்சமாக குறைந்துள்ளது. இந்த விலை குறைப்பு ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காம்பேக்ட் எஸ்யூவியின் டீசல் பேஸ் மாடலுக்கு நேரடி போட்டி ஏற்படுத்தியுள்ளது.

ஈக்கோஸ்போர்ட்டுக்கு போட்டி

ஈக்கோஸ்போர்ட்டுக்கு போட்டி

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பேஸ் மாடல் ரூ.7.36 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனையாகிறது. முன்பு இரு எஸ்யூவி மாடல்களின் டீசல் பேஸ் வேரியண்ட்டுக்கும் இடையில் ரூ.1 லட்சத்திற்கும் மேல் விலை வித்தியாசம் இருந்தது. தற்போது அது கணிசமாக குறைந்துள்ளது.

கூடுதல் வாரண்டி

கூடுதல் வாரண்டி

ரெனோ டஸ்ட்டர் டீசல் எஸ்யூவியின் ஆர்எக்ஸ்இ வேரியண்ட்டை வாங்கும் வாடிக்கையாளர்கள் 2 ஆண்டுகள் அல்லது 80,000 கிமீ வரை கூடுதல் வாரண்டியை பெறலாம். வரும் 15ந் தேதி வரை டஸ்ட்டர் எஸ்யூவியை முன்பதிவு செய்பவர்களுக்கு இந்த சலுகை கிடைக்கும்.

 அதுமட்டுமா...

அதுமட்டுமா...

இலவச இன்ஸ்யூரன்ஸ், ரூ.20,000 மதிப்புடைய பரிசுப் பொருட்கள் மற்றும் 4 ஆண்டுகளுக்கான அவசர சாலை உதவி திட்டம் ஆகியவற்றையும் டஸ்ட்டரை முன்பதிவு செய்பவர்களுக்கு குறிப்பிட்ட கால சலுகையாக ரெனோ அறிவித்துள்ளது.

 பல்ஸ் காருக்கு...

பல்ஸ் காருக்கு...

ரெனோ டஸ்ட்டருக்கு மட்டுமின்றி, ரெனோ பல்ஸ் டீசல் காரின் பேஸ் வேரியண்ட்டுக்கும் சலுகைகள் வழங்கப்படுகின்றன. மேலும், பல்ஸ் டீசல் காரின் பேஸ் மாடலின் விலை ரூ.6.16 லட்சத்திலிருந்து ரூ.5.69 லட்சமாக குறைக்கப்பட்டிருக்கிறது.

ரெனோ ஸ்காலா

ரெனோ ஸ்காலா

ரெனோ ஸ்காலா செடான் டீசல் காரின் ஆர்எக்ஸ்எல் வேரியண்ட்டின் விலை ரூ.8.86 லட்சத்திலிருந்து ரூ.8.29 லட்சமாக குறைக்கப்பட்டிருக்கிறது. கூடுதல் விபரங்களுக்கு அருகிலுள்ள ரெனோ கார் டீலரை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 9, 2014, 12:14 [IST]
English summary
French car maker Renault is offering huge cash discounts on its high selling compact SUV Duster. The company has directly cut the ex-showroom price of this vehicle. After this cut, the entry level Renault Duster RxE diesel is priced at Rs.8.18 lakh in comparison to Rs.8.70 lakh (ex showroom Delhi).
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+