சென்னையில் ரெனோ லாட்ஜி எம்பிவி கார் சோதனை: அறிமுகம் எப்போது?

By Saravana

இந்திய எம்பிவி கார் மார்க்கெட்டில் ரீலிசாகும் புதிய மாடல்கள் வரிசை கட்டி நிற்கின்றன. தற்போது மாருதி எர்டிகா கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த காம்பேக்ட் எம்பிவி கார் மார்க்கெட்டில் செவர்லே என்ஜாயும் கொஞ்சம் சந்தோமடைந்து வருகிறது.

வரும் 23ந் தேதி புதிய ஹோண்டா மொபிலியோ கார் விற்பனைக்கு வர இருக்கிறது. இதைத்தொடர்ந்து, டட்சன் கோ ப்ளஸ் எம்பிவி கார் வர இருக்கிறது. இந்த நிலையில், பிரான்சை சேர்ந்த ரெனோவும் எம்பிவி கார் மார்க்கெட்டில் புதிய மாடலுடன் குதிக்கிறது. ஆம், டேஸியா பிராண்டிலான லாட்ஜி எம்பிவி காரை தனது பிராண்டில் ரீபேட்ஜ் செய்து இந்திய மண்ணில் களமிறக்குகிறது.


சோதனை ஓட்டம்

சோதனை ஓட்டம்

ரெனோ கார் ஆலை அமைந்துள்ள சென்னை சுற்று வட்டாரப் பகுதிகளில் தற்போது லாட்ஜி எம்பிவி கார் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. எனவே, அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்துவிடுவது உறுதியாகியுள்ளது.

டீசல் மாடலில்...

டீசல் மாடலில்...

டீசல் மாடலில் மட்டும் இந்த புதிய கார் வருவதாக தகவல்கள் கூறுகின்றன. டஸ்ட்டரில் இருப்பதுபோன்றே, 1.5 லிட்டர் கே9கே டீசல் எஞ்சின் இருவிதமான டியூனிங் கொண்ட மாடல்களில் கிடைக்கும். ஒன்று 85 பிஎஸ் பவரை அளிக்கும் திறன் கொண்டதாகவும் மற்றொரு மாடல் 110 பிஎஸ் பவர் கொண்டதாகவும் இருக்கும். 5 ஸ்பீடு அல்லது 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்ட மாடல்களில் கிடைக்கும்.

சென்னையில் உற்பத்தி

சென்னையில் உற்பத்தி

இந்த ஆண்டு இறுதியில் இந்த காரின் உற்பத்தி சென்னை, ஒரகடத்திலுள்ள ரெனோ - நிசான் ஆலையில் துவங்கப்பட உள்ளது. இதற்கு ரெனோ தலைமையகமும் பச்சைக் கொடி காட்டிவிட்டது.

விலை

விலை

புதிய ஹோண்டா மொபிலியோ கார் ரூ.7 லட்சம் ஆரம்ப விலையில் வர இருக்கும் நிலையில், இந்த புதிய எம்பிவி கார் ரூ.8 லட்சம் ஆரம்ப விலை கொண்டதாக இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

டஸ்ட்டர் உதிரிபாகங்கள்

டஸ்ட்டர் உதிரிபாகங்கள்

டஸ்ட்டரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பல பாகங்களை இந்த காரிலும் பயன்படுத்த ரெனோ முடிவு செய்துள்ளது. இதனால், விலையிலும் மிக சரியான எம்பிவி காராக இருக்கும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.

 புதிய குட்டிக் கார்

புதிய குட்டிக் கார்

அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் லாட்ஜி எம்பிவி காரையும், இரண்டாவது காலாண்டில் புதிய குட்டிக் கார் மாடலையும் அறிமுகப்படுத்த ரெனோ திட்டமிட்டுள்ளது. ஹூண்டாய் இயான் மற்றும் ஆல்ட்டோ கார்களுக்கு புதிய குட்டிக் கார் போட்டியாக இருக்கும். இந்த இரு மாடல்களின் மூலம் இந்திய மார்க்கெட்டில் 5 சதவீத பங்களிப்பை பெறுவதற்கு ரெனோ இலக்கு வைத்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, July 12, 2014, 13:38 [IST]
English summary
The MPV segment in India is heating up fast with two new launches on the way. Honda will be launching its Mobilio first on 23rd July. Japanese car maker Datsun will be coming a little later with its GO+ MPV. The current segment leader is Maruti Suzuki's Ertiga MPV, which has been the choice of many.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+