ஆட்டோ எக்ஸ்போவில் அசத்தலாக நிற்கும் ரெனோ கான்செப்ட் கார்!
ரெனோவின் டிசைன் வித்தகத்தை காட்டும் விதத்தில் புதிய கான்செப்ட் கார் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
ரெனோ KIWD என்ற பெயரிலான இந்த கான்செப்ட் மாடல் வடிவமைப்பில் இந்திய டிசைன் பிரிவின் ஆலோசனைகளும் இடம்பெற்றுள்ளன.

இந்தியாவுக்கு முக்கியத்துவம்
ஐரோப்பாவை விட்டு முதல்முறையாக வெளிநாடு ஒன்றில் ரெனோ அறிமுகம் செய்யும் முதல் கான்செப்ட் கார் இது என்பது குறிப்பிடத்தக்கது.

டேப்லெட் கட்டுப்பாடு
இந்த காரின் டேஷ்போர்டில் பொருத்தப்பட்டிருக்கும் டேப்லெட் கம்ப்யூட்டர் மூலம் பொழுதுபோக்கும், நேவிகேஷன், டிரைவருக்கு தேவையான தகவல்களை பெற முடியும்.

எஞ்சின்
இந்த காரில் 1.2 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. டியூவல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் கொண்டது.

அம்சங்கள்
எலக்ட்ரிக்கல் தொழில்நுட்பத்தில் திறக்கும் கதவுகள், எல்இடி லைட்டுகள், டிஎஃப்டி திரை மற்றும் ஏராளமான நவீன தொழில்நுட்ப வசதிகளை இந்த கார் கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications








