அடுத்த தலைமுறை ரெனோ டஸ்ட்டர் எப்போது அறிமுகம்?
உலக அளவில் காம்பேக்ட் எஸ்யூவி மாடல்களுக்கு புதிய பாதை வகுத்து கொடுத்த ரெனோ டஸ்ட்டர் அடுத்த தலைமுறையை காண இருக்கிறது.
ஆம், டிசைனிலும், வசதிகளிலும் இன்னும் மேம்பட்ட டஸ்ட்டர் மாடலை ரெனோவின் அங்கமான டேஸியா உருவாக்கி வருகிறது. தற்போதைய மாடலைவிட கூடுதல் கம்பீரம் கொண்டதாக டஸ்ட்டரை மாற்றும் பணிகள் நடந்து வருகின்றன. விற்பனையில் மில்லியன் சாதனை படைத்துவிட்ட டஸ்ட்டரின் புதிய மாடல் பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

டிசைன்
வழக்கம்போல் ஹெட்லைட், முன்பக்க கிரில், பனி விளக்குகள், ஸ்கிட் பிளேட், அலாய் வீல்கள், வீல் ஆர்ச்சுகளில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும். இன்டிரியரும் பிரிமியம் அம்சங்களுடன் மாற்றப்படுகிறது.

ஸ்பேர் வீல்
பின்புறத்திலும் புதிய டெயில் விளக்குகள், மறுவடிவமைப்பு பெற்ற பின்புற கதவு என மாற்றங்கள் கண்டிருக்கும். இதுதவிர, பின்புற கதவில் ஸ்பேர் வீல் பொருத்தி வர இருக்கிறதாம்.

புதிய பெட்ரோல் எஞ்சின்
டீசல் மாடலில் 1.5 லிட்டர் கே9கே எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். அதேவேளை, பெட்ரோல் மாடலில் புதிய 1.2 லிட்டர் டிசிஇ எஞ்சினுடன் வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அறிமுகம்
வரும் 2017ம் ஆண்டில் புதிய தலைமுறை ரெனோ டஸ்ட்டர் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

விரைவில் 4 வீல் டிரைவ் மாடல்
இது ஒருபுறம் இருக்க தற்போதைய மாடலின் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடலை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது ரெனோ. ரூ.12 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரையிலான விலையில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








