இந்தியாவில் யூஸ்டு கார் பிசினஸில் இறங்கும் ரெனோ கார் நிறுவனம்!
இந்தியாவில் யூஸ்டு கார் வர்த்தகத்தை துவங்குவதற்கு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனோ கார் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
மஹிந்திராவிடமிருந்து கழன்று கொண்டு தனியாக கார் விற்பனையில் இறங்கிய ரெனோ நிறுவனத்துக்கு டஸ்ட்டர் எஸ்யூவி வர்த்தகத்தில் மிகப்பெரிய பங்களிப்பை அளித்து வருகிறது.

இதைத்தொடர்ந்து, இந்திய மார்க்கெட்டில் வலுவான காலூன்றும் வகையில், ஏராளமான புதிய திட்டங்களை ரெனோ செயல்படுத்த உள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு 2 புத்தம் புதிய கார் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதில், ஒன்று லாட்ஜி எம்பிவி கார் என்பது உறுதியாகிவிட்டது. மற்றொன்று குட்டிக் காராக இருக்கும்.
இதுதவிர, இந்தியாவில் வலுவான வர்த்தகத்துக்கு அடிகோலும் வகையில், பயன்படுத்தப்பட்ட கார் சந்தையிலும் கால் பதிக்க ரெனோ திட்டமிட்டுள்ளது.
"பயன்படுத்தப்பட்ட கார் சந்தையில் இறங்குவதன் மூலம் சிறப்பான வர்த்தகத்தை பெறுவதோடு, ரெனோ பிராண்டை பிரபலப்படுத்த உதவும். மேலும், கார் எக்ஸ்சேஞ்ச் செய்து எங்களிடம் புதிய கார் வாங்குவதற்கான வழிவகைகளும் எளிதாகும்," என அந்த நிறுவனத்தின் உயரதிகாரி கருத்து தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு பயன்படுத்தப்பட்ட கார் விற்பனை சேவையை துவங்க இருப்பதாக ரெனோ தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








