இந்தியாவில் விற்பனைக்கு வரும் புதிய ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட்!
வரும் 7ந் தேதி இந்தியாவில் புதிய ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ்- II கார் விற்பனைக்கு வர இருக்கிறது. டிசைனில் சிறிய மாற்றங்கள் மற்றும் புதிய இன்டிரியருடன் இந்த கார் மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
தள்ளுபடி விலையில் மெட்ஸிலர் டயர்கள்!
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ரோல்ஸ்ராய்ஸ் கார் மாடல் என்பதால், புதிய மாடல் மீது கோடீஸ்வர வாடிக்கையாளர்கள் அதிக ஆவலுடன் காத்திருக்கின்றனர். படங்கள், கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

மாற்றங்கள்
ஹெட்லைட் மற்றும் பம்பர் டிசைன் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய எல்இடி விளக்குகள் கொண்ட ஹெட்லைட் மற்றும் பகல்நேர ரன்னிங் விளக்குகள் அழகு சேர்க்கின்றன. மேலும், ரோல்ஸ்ராய்ஸ் பாரம்பரியத்தை பரைசாற்றும் கிரில் டிசைன், புதிய இன்டிகேட்டர், டெயில் லைட்டுகளும் சிறப்பு சேர்க்கின்றன. புதிய வண்ணங்கள் மற்றும் அலாய் வீல் டிசைன்களும் அறிமுகம் செய்யப்படும்.

இன்டிரியர்
உயர்தர லெதர் இருக்கைகள்,முன்புற இருக்கைகளை எலக்ட்ரிக்கல் முறையில் அட்ஜெஸ்ட் வசதி போன்றவை குறிப்பிட்டு கூறலாம். உட்புறத்தில் ஏராளமான அலங்கார வேலைப்பாடுகளை கஸ்டமைஸ் செய்து பெற முடியும். டச்பாட் கன்ட்ரோலர் கொண்ட புதிய சென்ட்ரல் கமாண்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது.

எஞ்சின்
எஞ்சினில் மாற்றம் இல்லை. முந்தைய மாடலில் இருக்கும் அதே 6.0 லிட்டர் வி12 எஞ்சின்தான் பொருத்தப்பட்டு வருகிறது. 8 ஸ்பீடு இசட்எஃப் டியூவல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது. மணிக்கு 250 கிமீ வேகத்தில் செல்லும் விதத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்பார்க்கும் விலை
ரூ.3.80 கோடி ஆரம்ப விலையில் புதிய ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ்-II கார் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








