இந்தியாவில் ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் ஸ்பெஷல் எடிசன் கார் அறிமுகம்!

By Saravana

இந்தியாவில் ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஸ்டான்டர்டு மாடல் கோஸ்ட் காரைவிட ரூ.30 லட்சம் கூடுதலான விலையில் இந்த புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் வி- ஸ்பெசிஃபிகேஷன் என்ற பெயரில் வந்திருக்கும் இந்த புதிய மாடலின் எஞ்சின் சாதாரண மாடலைவிட 30 எச்பி கூடுதல் பவர் கொண்டது. இந்த காரின் படங்கள் மற்றும் கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

 சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

லிமிடேட் எடிசன் பேட்ஜ், குரோம் பூச்சு பூசப்பட்ட எக்ஸாஸ்ட் குழாய்கள், 21 இஞ்ச் பாலிஷ்டு அலாய் வீல்கள் ஆகியவை இந்த லிமிடேட் எடிசன் கோஸ்ட் காரின் சிறப்பு ஆக்சஸெரீஸ்கள்.

இன்டிரியர்

இன்டிரியர்

சில் பிளேட்டுகள், கூடுதலாக ஒரு கடிகாரம், மெட்டல் பிளேட் கவருடன் மல்டிமீடியா பிளேயர் ஆகியவை இன்டிரியரின் சிறப்பம்சங்கள். வி ஸ்பெசிஃபிகேஷன் கொண்ட இருக்கைகள் ஆகியவை இந்த காரின் அந்தஸ்தை மேலும் கூட்டுகிறது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த காரில் 6.6 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. சாதாரண கோஸ்ட் மாடலில் இந்த எஞ்சின் 563 எச்பி பவரையும், 780 என்எம் டார்க்கையும் அளிக்கும். ஆனால், இந்த லிமிடேட் எடிசன் மாடலின் எஞ்சின் 593 எச்பி பவரை அளிக்கும் வகையில் ட்யூன் செய்யப்பட்டுள்ளது.

பெர்ஃபார்மென்ஸ்

பெர்ஃபார்மென்ஸ்

2 டன் எடை கொண்ட இந்த கார் 0- 100 கிமீ வேகத்தை வெறும் 4.7 நொடிகளில் கடந்து விடும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 250 கிமீ.

விருப்பம்போல் வசதிகள்

விருப்பம்போல் வசதிகள்

இந்த காரில் வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கு இணங்க கூடுதல் வசதிகள் மற்றும் சிறப்பம்சங்களுடன் கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும் என்று ரோல்ஸ்ராய்ஸ் தெரிவித்துள்ளது.

லிமிடேட் எடிசன்

லிமிடேட் எடிசன்

வரும் ஜூன் மாதம் வரை லிமிடேட் எடிசன் கோஸ்ட் வி ஸ்பெசிஃபிகேஷன் கார் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.5.20 கோடி மும்பை எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய கோஸ்ட் லிமிடேட் எடிசன் மாடல் கிடைக்கும்.

More from DriveSpark

Article Published On: Thursday, February 20, 2014, 11:56 [IST]
English summary
Rolls Royce has launched a limited edition Ghost in India which costs a staggering INR 30 lakhs more than the standard Ghost. Named the Ghost V-Specification, this special edition model can now be commissioned in India from INR 5.20 crores onwards.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+