இந்திய மஹாராஜாக்களை போற்றும் ரோல்ஸ்ராய்ஸ் கார்... இந்தியாவுக்கு கிடையாது!

By Saravana

இந்திய மஹாராஜாக்களுடன் இருந்த உறவை பொற்காலமாக வர்ணித்திருக்கும் ரோல்ஸ்ராய்ஸ், இதற்காக பிரத்யேக மாடல் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ஆனால், இந்த புதிய கார் துபாயில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும்.

சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் ரோல்ஸ்ராஸ்ய் நிறுவனத்தின் வர்த்தகத்தில் பெரும் பங்களிப்பை வழங்கினார்கள் இந்தியாவை சே்ந்த மன்னர்கள். ஒவ்வொரு மஹாராஜாவும் தனது ஆடம்பரத்தையும், செல்வ வளத்தையும் நிரூபிக்கும் விதத்தில் ரோல்ஸ்ராய்ஸ் கார்களை பயன்படுத்துவதை பெருமையாக கருதினார்கள்.

இதனால், மஹாராஜாக்களுக்கு இடையில் ரோல்ஸ்ராய்ஸ் கார்களை போட்டி போட்டு வாங்கினார். இதனால், 50 ஆண்டுகளில் மட்டும் 840 ரோல்ஸ்ராய்ஸ் கார்களை இந்திய மஹாராஜாக்கள் வாங்கியுள்ளனராம். இதனை பொற்காலமாக குறிப்பிட்டு, ஃபான்டம் டிராப்ஹெட் கூபே மாடலை வெளியிட்டிருக்கிறது ரோல்ஸ்ராய்ஸ். இந்த காரின் படங்களையும், அதில் இடம்பெற்றிருக்கும் பிரத்யேக அம்சங்களையும் ஸ்லைடரில் காணலாம்.


அறிமுகம்

அறிமுகம்

துபாயில் உள்ள ஏஜிஎம்சி ரோல்ஸ்ராய்ஸ் ஷோரூமில்தான் இந்த பிரத்யேக கார் மாடல் அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

கடின உழைப்பு

கடின உழைப்பு

இந்த காரை 2 ஆண்டுகள் உழைப்பில் ரோல்ஸ்ராய்ஸ் பணியாளர்கள் கையாலேயே பார்த்து பார்த்து இழைத்து உருவாக்கியுள்ளனர்.

வண்ணம்

வண்ணம்

கராரா ஒயிட் என்ற பிரத்யேக வெள்ளை நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. அதில், இந்தியாவின் தேசிய பறவையான மயில் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.

கூரை

கூரை

அடர்பச்சை நிறத்திலான திறந்து மூடும் கூரை கொடுக்கப்பட்டுள்ளது.

 இன்டிரியர்

இன்டிரியர்

டேஷ்போர்டில் மரவேலைப்பாடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீலின் கைப்பிடி எமரால்ட் பச்சை நிறம் கொண்டுள்ளது. இந்த வண்ணத்திலேயே இன்டிரியர் விளிம்புகள் ஃபினிஷ் செய்ய ப்பட்டுள்ளன. க்ரீம் வண்ணத்திலான இருக்கைகள் கொடுக்கப்பட்டிருப்பதுடன், அதில் எமரால்ட் பச்சை வண்ண கோடுகள் மூலம் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளன.

 ஆர்ம் ரெஸ்ட்

ஆர்ம் ரெஸ்ட்

ஆர்ம் ரெஸ்ட்டுகள் மரவேலைப்பாடுகளுடன், கைகளை வைக்கும்போது சுகம் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஹெட்ரெஸ்ட்

ஹெட்ரெஸ்ட்

ஹெட்ரெஸ்ட்டில் இந்தியாவின் தேசிய பறவையான மயில் சின்னம் எம்பராய்டரி செய்யப்பட்டுள்ளது.

விலை

விலை

விலை விபரங்கள் வெளியிடப்படவில்லை. துபாயை சேர்ந்த இந்திய பணக்கார்களின் ஆசையை பூர்த்தி செய்யும்விதமாக இந்த காரை வெளியிட்டிருப்பதாக ரோல்ஸ்ராய்ஸ் தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, November 15, 2014, 10:09 [IST]
English summary
British luxury carmaker Rolls-Royce has unveiled the one-of-a-kind Maharaja Phantom Drophead Coupe on November 13, at the AGMC Rolls Royce Showroom. This exclusive model is designed to pay tribute to the historic relationship between Rolls Royce and India Maharajas. 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+