ரோல்ஸ்ராய்ஸ் வரலாற்றில் முதல்முறையாக... ஒரே ஆர்டரில் 30 கார்கள்!
ரோல்ஸ்ராய்ஸ் வரலாற்றில் முதல்முறையாக ஒரே ஆர்டரில் 30 கார்கள் டெலிவிரி செய்யப்பட உள்ளன. சீனாவின் சிறப்பு நிர்வாக அந்தஸ்தில் உள்ள மக்காவ் பகுதியை சேர்ந்த லூயிஸ் XIII என்ற பிரபல நட்சத்திர ஓட்டலின் அதிபர் ஸ்டீபன் ஹங் இந்த ஆர்டரை கொடுத்துள்ளார்.
30 ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் கார்களை ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் டெலிவிரி கொடுக்க உள்ளது. இதுவரை ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்துக்கு கிடைத்த மிகப்பெரிய ஆர்டர் இதுதான் என குறிப்பிடப்படுகிறது. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

ஒப்பந்தம்
கடந்த 16ந் தேதி இதற்கான ஒப்பந்தம் லண்டனின் மேற்கு சசெக்ஸ் பகுதியிலுள்ள ரோல்ஸ்ராய்ஸ் அலுவலகத்தில் நடந்தது. ரோல்ஸ்ராய்ஸ் சிஇஓ., டார்ஸ்டென் முல்லர் மற்றும் லூயிஸ் ஓட்டல் அதிபர் ஸ்டீபன் ஹங் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதுதவிர, இரு நிறுவனங்களின் உயரதிகாரிகளும் பங்கேற்றனர்.

வாடிக்கையாளர் சேவை
லூயிஸ் XIII நட்சத்திர ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்கள் சேவையில் இந்த கார்கள் பயன்படுத்தப்பட உள்ளன. எங்களது வாடிக்கையாளர்களுக்கு இந்த ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் மூலம் நிச்சயம் புதிய அனுபவம் கிடைக்கும் என லூயிஸ் ஓட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கஸ்டமைஸ் மாடல்
30 கார்களும் லூயிஸ் ஓட்டல் நிர்வாகத்தின் விருப்பங்களின் அடிப்படையில் பிரத்யேக மாடல்களாக கஸ்டமைஸ் செய்யப்பட்டிருக்கும். வெளிப்புறம் மற்றும் உள் வடிவமைப்பில் பல பிரத்யேக வேலைப்பாடுகளுடன் அலங்கரித்து வழங்கப்பட உள்ளன.

காஸ்ட்லி ரோல்ஸ்ராய்ஸ்
மொத்தம் ஆர்டர் செய்யப்பட்டிருக்கும் 30 கார்களில் 2 கார்களை மிகவும் பிரத்யேக அம்சங்களுடன் கஸ்டமைஸ் செய்து கொடுக்கப்பட உள்ளன. இவை வெளிப்புறத்திலும், உள்புறத்திலும் தங்க தகடுகள் பயன்படுத்தப்பட உள்ளது. இதுவரை ரோல்ஸ்ராய்ஸ் தயாரித்த கார்களிலேயே இவை இரண்டும் மிகவும் விலை அதிகம் கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

மதிப்பு
இந்த கார்களுக்கான ஆர்டர் மதிப்பு ரூ.122 கோடி என தெரிவிக்கப்படுகிறது.

பயிற்சி
இந்த கார்களை இயக்கும் ஓட்டுனர்களுக்கு சிறப்பு பயிற்சியை ரோல்ஸ்ராய்ஸ் வழங்க உள்ளது. அதேபோன்று, இந்த கார்களை நிறுத்துவதற்காக பிரத்யேக வளாகத்தை ஓட்டலில் அமைக்க லூயிஸ் ஓட்டல் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

டெலிவிரி எப்போது?
வரும் 2016ம் ஆண்டு இந்த புதிய ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் கார்கள் மக்காவ் நகரை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








