இந்தியாவில் புதிய கோஸ்ட் காரை அறிமுகப்படுத்தும் ரோல்ஸ்ராய்ஸ்!
வரும் பண்டிகை காலத்தில் இந்தியாவில் புதிய ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் - II கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.
ஜெனீவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார் வரும் மாதங்களில் பல்வேறு நாடுகளில் விற்பனைக்கு செல்கிறது. அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வரும்.

பழைய மாடலும்...
புதிய கோஸ்ட் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டாலும், தற்போது நம் நாட்டு மார்க்கெட்டில் இருக்கும் கோஸ்ட் ஸ்டான்டர்டு வீல் பேஸ் கொண்ட மாடலும் தொடர்ந்து விற்பனையில் இருக்கும்.

வெற்றி தொடரும்
கோஸ்ட் மாடல் பெற்றிருக்கும் வெற்றியை இந்த புதிய கோஸ்ட்- II காரும் தக்க வைக்கும் என்று நம்புவதாக ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டார்ஸ்டென் முல்லர் ஓட்வோஸ் தெரிவித்துள்ளார்.

செயற்கைகோள் தொடர்பு வசதி
இந்த காரில் செயற்கைகோள் வழியான வைஃபை இன்டர்நெட் வசதியை வாடிக்கையாளர்கள் பெற முடியும் என்பதால், அவர்களது அலுவலக மற்றும் வர்த்தக பணிகளை சிறப்பாக தொடர முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை?
தற்போது ஸ்டான்டர்டு வீல் பேஸ் கொண்ட பழைய கோஸ்ட் மாடல் ரூ.4.36 கோடியில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த புதிய மாடல் ரூ.4.66 கோடி விலையில் வரும் என்று தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications








