அடுத்த ஆண்டு மார்ச்சில் வருகிறது மாருதி வேகன் ஆர் டீசல்?!

By Saravana

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் மாருதி வேகன் ஆர் டீசல் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புத்தம் புதிய 800சிசி டீசல் எஞ்சினை மாருதியின் தாய் நிறுவனமான சுஸுகி தயாரித்து வருகிறது. இந்த புதிய டீசல் எஞ்சின் முதலாவதாக மாருதி அறிமுகப்படுத்த இருக்கும் மினி டிரக்கில் பொருத்தப்பட உள்ளது.

Maruti Wagin R

இதைத்தொடர்ந்து, செலிரியோ காரில் இந்த புதிய எஞ்சின் பொருத்தப்பட்டு வர இருக்கிறது. இந்த நிலையில், மாருதியின் அதிகம் விற்பனையாகும் மாடலான வேகன் ஆர் காரில் இந்த புதிய டீசல் எஞ்சின் பொருத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாருதி வேகன் ஆர் கார் தற்போது இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் 4வது இடத்தில் உள்ளது. ஒருவேளை, டீசல் மாடல் அறிமுகம் செய்யப்பட்டால் வேகன் ஆர் காரின் விற்பனை கணிசமாக உயரும் வாய்ப்பு இருக்கிறது.

மேலும், அதிக மைலேஜ் தரும் என்பதால் இந்த காருக்கு மிகுந்த வரவேற்பு கிடைக்கும் என்பதும் ஆட்டோமொபைல் துறையினரின் எண்ணமாக உள்ளது. மாருதியின் வலுவான சர்வீஸ் கட்டமைப்பு மற்றும் குறைவான பராமரிப்பு செலவீனமும் இந்த காரின் விற்பனையை தூக்கிப் பிடிக்கும் என கருதப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, October 18, 2014, 16:41 [IST]
English summary

 Maruti Suzuki to turn around the Automobile Game Plan by introducing its smallest Diesel Engine in 800 CC Capacity. To make it further strong in Entry Hatch Segment - an All New 800CC Diesel Engine is expected to power all New Celerio by January 2015 and then later Wagon R by end of March 2015.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+