பிஎம்டபிள்யூவின் ஐ8 ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் காரை அறிமுகப்படுத்திய பாரத ரத்னா சச்சின்!
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் புதிய பிஎம்டபிள்யூ ஐ8 ஸ்போர்ட்ஸ் காரை பாரத ரத்னா சச்சின் டெண்டுல்கர் அறிமுகப்படுத்தினார்.
உலகின் மிகச்சிறந்த ஹைபிரிட் தொழில்நுட்பத்தை இந்த புதிய பிஎம்டபிள்யூ ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார் கொண்டுள்ளது.

விற்பனை
இந்தியாவில் 7 அல்லது 8 கார்களை மட்டுமே விற்பனை செய்ய பிஎம்டபிள்யூ திட்டமிட்டுள்ளது. இந்த கார்களை வாங்குவதற்கு ஏராளமான இந்திய வாடிக்கையாளர் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெலிவிரி
இந்தியாவில் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இந்த ஆண்டு இறுதியில் இந்த காரை டெலிவிரி கொடுக்க பிஎம்டபிள்யூ திட்டமிட்டுள்ளது.

பவர்
கார்பன் ஃபைபர் பாடியுடன் கட்டமைக்கப்பட்ட இந்த கார் ஹைபிரிட் எரிபொருள் நுட்பம் கொண்ட ஸ்போர்ட்ஸ் கார் மாடல். பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின் மோட்டாரில் இயங்கும் இந்த கார் அதிகபட்சமாக 362 எச்பி ஆற்றலையும், 570 என்எம் டார்க்கையும் அளிக்கும் திறன் கொண்டது.

பெர்ஃபார்மென்ஸ்
0- 100 கிமீ வேகத்தை 4.5 வினாடிகளில் கடக்கும் திறன் கொண்டதாகவும், உச்சபட்சமாக மணிக்கு 250 கிமீ வேகத்திலும் செல்லும் திறன் வாய்ந்தது.

இதர கார்கள்
பிஎம்டபிள்யூ ஐ8 ஹைபிரிட் ஸ்போரட்ஸ் காருடன் சேர்த்து பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான் டூரிஷ்மோ, பிஎம்டபிள்யூ எக்ஸ்5 மற்றும் எம்6 கிரான் கூபே ஆகிய கார் மாடல்களையும் பிஎம்டபிள்யூ விளம்பர தூதராக செயல்பட்டு வரும் சச்சின் டெண்டுல்கர் அறிமுகம் செய்தார்.


Click it and Unblock the Notifications








