மாருதி ரிட்ஸ் எலேட் எடிசன் காருக்கு ரூ.65,000 வரை தள்ளுபடி!

By Saravana

மாருதி ரிட்ஸ் எலேட் ஸ்பெஷல் எடிசன் காருக்கு ரூ.65,000 வரை தள்ளுபடி பெறும் வாய்ப்பை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

ஏராளமான சிறப்பம்சங்களுடன், சிறந்த செயல்திறன் கொண்ட மாடலான ரிட்ஸ் காருக்கு தொடர்ந்து தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் சிறப்புச் சலுகைகளை சேர்த்து அதிகபட்சமாக ரூ.65,000 வரை பெற்றுக் கொள்ளலாம்.

ரிட்ஸ் காரில் இருக்கும் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

கவர்ச்சியான ஸ்டிக்கர்

கவர்ச்சியான ஸ்டிக்கர்

வெளிப்புறத்தை மிக கவர்ச்சியாக காட்டும் வகையில் பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் கொடுக்கப்பட்டிருப்பதை காணலாம்.

 இன்டிரியர்

இன்டிரியர்

மிக ரம்மியமான உணர்வை தரும் வகையில் புதிய இன்டிரியர் பினிஷிங்கையும், முன் இருக்கையில் கால் வைக்கும் இடத்தில் ஆம்பியன்ட் விளக்கு கொடுக்கப்பட்டிருப்பதையும் காணலாம். புதிய ஸ்டீயரிங் வீல் கவர் கைகளுக்கு மிருதுவான உணர்வை தரும்.

மியூசிக் சிஸ்டம்

மியூசிக் சிஸ்டம்

யுஎஸ்பி போர்ட், சிடி பிளேயர், ஆக்ஸ் போர்ட் வசதிகள் கொண்ட 2 டின் மியூசிக் சிஸ்டம் பொருத்தப்பட்டிருக்கிறது.

 சீட் கவர்கள்

சீட் கவர்கள்

ஆரஞ்ச் மற்றும் சாம்பல் வண்ணத்தில் பிரத்யேக டிசைன் கொண்ட சீட் கவர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கழுத்துக்கான நெக் குஷனும் கூடுதல் ஆக்சஸெரீயாக இருக்கும்.

ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்

ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்

டிஜிட்டல் திரை வசதியுடன் கூடிய ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் கொடுக்கப்பட்டிருப்பது கூடுதல் பாதுகாப்பை வழங்கும்.

 புளூடூத் கிட்

புளூடூத் கிட்

பிளாபுங்கட் பிராண்டு புளூடூத் கிட் கொடுக்கப்பட்டுள்ளது.

 வைசர்கள்

வைசர்கள்

ஜன்னல் கதவுகளின் மேல் கொடுக்கப்பட்டிருக்கும் வைசர்கள்.

மிதியடிகள்

மிதியடிகள்

லிமிடேட் எடிசன் ரிட்ஸ் காருக்கு வழங்கப்படும் பிரத்யேக மிதியடிகள்.

கூடுதல் வசதி

கூடுதல் வசதி

சாவி, பர்ஸ் போன்றவற்றை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்கான சிறிய பை ஒன்று முன் இருக்கையின் பின்புறம் கொடுக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விலை

கூடுதல் விலை

சாதாரண மாடலைவிட இந்த புதிய லிமிடேட் எடிசன் மாடல் ரூ.20,000 கூடுதலான விலையில் கிடைக்கும். ஆனால், தற்போது ரூ.65,000 வரை சலுகைககளை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. அதேநேரத்தில், செலிரியோ டீசல் மாடல் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் நிலையில், இந்த காரின் உற்பத்தியை மாருதி நிறுத்த முடிவு செய்திருப்பதாக தகவல்கள் உலவி வருவதும் நினைவுக்கூறத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Saturday, November 15, 2014, 14:11 [IST]
English summary
Maruti Suzuki recently introduced the limited edition of its Ritz hatchback named as Ritz Elate. Now, the company is offering a saving of Rs 65,000 on this limited edition Ritz. 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+