கேபிஎன் டிராவல்ஸ்-க்கு சொகுசு பேருந்தை டெலிவிரி கொடுத்தது ஸ்கானியா!
தென் இந்தியாவில் முதலாவதாக கேபிஎன் டிராவல்ஸ் நிறுவனத்துக்கு முதல் சொகுசு பேருந்தை ஸ்கானியா பஸ் நிறுவனம் டெலிவிரி கொடுத்துள்ளது.
ஸ்கானியாவின் சொகுசு பேருந்தின் சாவியை கேபிஎன் பஸ் நிறுவன அதிபர் கே.பி.நடராஜன் மற்றும் அவரது பேரன் சர்வேஷ் ஆகியோரிடம் ஸ்கானியா இந்தியா நிறுவனத்தின் உயர் அதிகாரி ஆன்டர்ஸ் கிரண்ட்ஸ்டோமர் வழங்கினார்.

ஸ்கானியா பக்கம் காற்று
அடுத்த சில மாதங்களில் கேபிஎன் டிராவல்ஸ் நிறுவனத்தில் அதிக அளவில் ஸ்கானியா சொகுசு பேருந்துகள் சேர்க்கப்பட உள்ளன.

இருக்கை வசதி
கேபிஎன் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் ஸ்கானியா மெட்ரோலிங்க் சொகுசு பேருந்து 48 செமி ஸ்லீப்பர் இருக்கைகளை கொண்டது.

பாதுகாப்பு
தீப்பிடிக்காத தன்மை கொண்ட இன்டிரியர் மற்றும் முக்கிய பாகங்கள் பயன்படுத்தப்பட்டு கட்டமைக்கப்பட்டுள்ளது இனத் சொகுசுப் பேருந்து.

எஞ்சின்
இந்த சொகுசு பேருந்தில் 410 எச்பி ஆற்றலை வழங்கும் 13 லிட்டர் யூரோ3 டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்டது.

சிறப்பு பாதுகாப்பு வசதிகள்
இந்த புதிய சொகுசு பேருந்து பயணிகள் மற்றும் டிரைவருக்கு சிறந்த பாதுகாப்பு வசதிகளை கொண்டதாக இருக்கும் என ஸ்கானியா தெரிவித்துள்ளது. இந்த மாடல் பஸ்கள் ரோல்ஓவர் ஆகாத வண்ணம் கட்டமைக்கப்படுவதாகவும் ஸ்கானியா தெரிவித்துள்ளது. பயணிகளின் எதிர்பார்ப்பை எளிதாக நிறைவு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட இந்தியாவிலும் வரவேற்பு
தென் இந்தியாவில் கேபிஎன் டிராவல்ஸ் போன்று வட இந்தியாவில் மிகப்பெரிய போக்குவரத்து நிறுவனமாக விளங்கும் சித்தி வினாயக் லாஜிஸ்டிக் நிறுவனத்திடம் இருந்து 120 சொகுசு பஸ்களை சப்ளை செய்வதற்கான ஆர்டரை ஸ்கானியா பெற்றுள்ளது நினைவிருக்கலாம்.

வால்வோவுக்கு சறுக்கல்
சொகுசு பஸ் மார்க்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் வால்வோ நிறுவனத்தின் சொகுசு பேருந்துகள் அடிக்கடி தீ விபத்தில் சிக்கி வருவது அந்த நிறுவனத்துக்கு பின்னடவை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஸ்கானியா நிறுவனத்தின் பக்கம் பஸ் அதிபர்களின் கவனம் திரும்பியுள்ளது.


Click it and Unblock the Notifications








