போலி வாகன உதிரிபாகங்களுக்கு எதிராக சியாம் பிரச்சாரம்!
வாகன தொழில்துறையின் மிகப்பெரிய சவாலாக போலி உதிரிபாகங்களின் புழக்கம் இருந்து வருகிறது. பல ஆயிரம் கோடி நஷ்டத்தை ஏற்படுத்தி வரும் போலி உதிரிபாகங்களுக்கு எதிராக இந்திய வாகன உற்பத்தியாளர் கூட்டமைப்பு(சியாம்) போலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளது.
இதற்காக, போலி உதிரிபாக தடுப்பு குழு ஒன்றையும் சியாம் அமைத்துள்ளது. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவிற்கு வருகை தந்த பார்வையாளர்களிடம் பல்வேறு இடங்களில் போலி உதிரிபாகங்களின் தீங்குகள் பற்றிய விளக்க குறிப்புகளும், பேனர்களும் வைக்கப்பட்டிருந்தன. மேலும், பார்வையாளர்கள் தங்களது கருத்துக்களை தெரிவிப்பதற்கும் வழி வகை செய்யப்பட்டிருந்தது.

டெல்லி மற்றும் மும்பை நகரங்களில் போலி வாகன உதிரிபாகங்களுக்கு எதிராக பள்ளிக்கூடங்களில் நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களின் விபரம் அறிவிக்கப்பட்டதுடன், அதில் சிறந்த ஓவியங்கள் சியாம் அமைந்திருந்த அரங்குகளில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

இதுதவிர, போலி உதிரிபாகங்கள் ஏற்படும் தீங்குகள் குறித்து விழிப்புணர்வு நாடகங்களும் நடத்தப்பட்டன. இதுகுறித்து சியாம் அமைப்பின் போலி உதிரிபாக தடுப்புக் குழு தலைவர் ராஜேஷ் பகா கூறுகையில்," போலி உதிரிபாகங்களை ஒழித்துக் கட்டுவதற்காக ஒட்டுமொத்த வாகன துறையையும் ஒருங்கிணைத்து போராடுகிறோம்.
வாகன உதிரிபாகங்கள் எளிதாக கிடைப்பதற்காக நடவடிக்கைகளை எடுக்கப்படும். விலை என்பது முக்கியமல்ல, வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு என்பதே இந்த இடத்தில் மிக முக்கியமானதாக எடுத்துக் கொள்ள வேண்டும்," என்றார்.


Click it and Unblock the Notifications








